கோரா மங்கர் அல்லது கொத்வா பஹார் எனும் குகை ஸ்தலம் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும், மாவ் கான் கிராமத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. பஹார் எனப்படும் மலைக்குன்றின்மீது கவா கோ எனும் பாறைக்குகை உள்ளது.
இந்த பாறைக்குகை ஸ்தலத்திற்கு ஏறிச்செல்லும் வழி அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு செங்குத்தான மலையின்மீது குறுகலான நீர்விழ்ச்சிப் பாறைப்பிளவுக்கிடையே இந்த குகை அமைந்திருக்கிறது.
ஆனால் இந்த ஸ்தலத்தை அடைந்த பின் காணக்கிடைக்கும் இயற்கை எழிற்காட்சிகள் பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சுற்றிலும் உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை இங்கிருந்து ரசிக்க முடியும்.
இந்த மலைக்குகையில் ஏராளமான கற்கால சித்திரங்கள் காணப்படுகின்றன. அக்கால மக்களின் நடனம், வேட்டைத்தொழில் மற்றும் போர் போன்ற அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன.
கோரா மங்கர் மலைக்குகையின் ஒரு சிறப்பம்சமாக தவளை நடனம் எனும் நாட்டுப்புற நடனம்பிரசித்தி பெற்றுள்ளது. மிக நுணுக்கமான அசைவுகளை கொண்ட இந்த நடனம் வறட்சிகாலத்தில் மழை வரவைக்கும் சடங்கின் ஒரு அங்கமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. நடனமாடும்போது அம்புகள் மற்றும் எறியீட்டிகள் போன்றவற்றை ஏந்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications