நௌகர் கோட்டை எனும் இந்த சிறிய கட்டுமானம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் சாக்கியா எனும் இடத்தின் தென் பகுதியில் உள்ளது. நௌகர் எனும் இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலும், ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 40கி.மீ தூரத்திலும் இது அமைந்திருக்கிறது.
காஷி நரேஷ் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த கோட்டையிலிருந்து கர்ம்னாஷா ஆற்றின் அழகு மற்றும் சுற்றியுள்ள இயற்கை வனப்பை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
இந்த நௌகர் கோட்டையை சுற்றி சில புராதனமான சிதிலங்கள் காணப்படுகின்றன. இவை 3000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான மனித நாகரிகத்துக்குரியதாக சொல்லப்படுகிறது.
கெருவத்வாபஹார் எனும் மலை இந்த கோட்டையின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மலைப்பகுதி முழுதும் உலோக மற்றும் கனிம தாதுக்கள் குவிந்துள்ளன.
கர்ம்னாஷா ஆற்றில் வந்து இணையும் ஒரு சிறு ஓடையின் இரு கரைகளிலும் இந்த படிவுகள் காணப்படுகின்றன. இந்த ஓடை இணையும் இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சியும் உருவாகிறது. பின்னர் இது நௌகர் கோட்டையின் வடகிழக்காக ஓடுகிறது.



Click it and Unblock the Notifications