உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயத்தில் இந்த ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி எனும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன.
இவற்றில் ராஜ்தாரி நீர்வீழ்ச்சியானது 65 மீ உயரத்துடன் இந்த சரணாலயத்தில் இருப்பவற்றிலேயே மிகப்பெரியதாக அமைந்துள்ளது. அடுக்கடுக்காக வந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் செழிப்பான வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு பிக்னிக் ஸ்தலத்திற்கான வசதிகளை அரசாங்கம் சமீபத்தில் உருவாக்கியிருக்கிறது. எனவே தற்போது இது பிக்னிக பிரியர்கள் விரும்பும் ஒரு சிற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்து வருகிறது.
தேவ்தாரி எனும் மற்றொரு நீர்வீழ்ச்சியானது ராஜ்தாரி நீர்வீழ்ச்சிக்கு 500 மீ கீழே அமைந்திருக்கிறது. இதுவும் பயணிகள் விரும்பி ரசிக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாக பிரசித்தி பெற்றுள்ளது.
ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி ஆகிய இரண்டு நீர்வீழ்ச்சிகளுக்குமான நீர் ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து வருகிறது. இந்த நீர்த்தேக்கம் சந்திரபிரபா வனப்பகுதியில் சந்திரபிரபா அணைக்கு முன் ஒரு கிலோ மீட்டர் உள்ளது.
இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தின்போது அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.



Click it and Unblock the Notifications