சல்கான் ஃபோசில் பார்க் எனப்படும் இந்த மர தொல்படிம பூங்கா உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் கைமூர் காட்டுயிர் சரணாலயத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.
மாவட்டத்தலைநகரான ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த பூங்கா உள்ளது. புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்தலமாக இந்த பூங்கா பிரசித்தி பெற்றிருக்கிறது.
இங்கு காணப்படும் மரப்படிமங்கள் பல யுகங்களை கடந்து ஒரு இறுகிப்போன அமைப்பாக காணப்படுகின்றன. ஆல்கா எனப்படும் பூஞ்சைக்காளான்கள் வட்டவடிவத்தில் பாறைப்படிவுகள் போன்று இறுகி காணப்படுகின்றன.
புவியியல் வல்லுனர்கள் இந்த மரப்படிமங்கள் சுமாராக 1400 மில்லியன் வருடங்கள் (14 கோடி வருடங்கள்) பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அதாவது புரோட்ட்டோஜோயிக் எனும் புவி யுகத்தை சேர்ந்தவை இந்த படிமங்கள் என்று கூறுகின்றனர்.
25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மரப்படிம பூங்காவானது அமெரிக்காவில் உள்ள இது போன்ற பூங்காவான யெல்லோ ஸ்டோன் நேஷனல் பூங்காவை காட்டிலும் அளவில் பெரியது மட்டுமல்லாமல் அதைவிட பழமையானதும் ஆகும்.
உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் கூற்றுப்படி சல்கான் ஃபோசில் பார்க் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே சொந்தமான ஒரு இயற்கைப்புதையலாகும்.
புவியில் உயிர்களின் பரிணாமம் மற்றும் பூமியின் தோற்றம் குறித்த பல தகவல்கள் இந்த படிமங்களில் பொதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications