Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சௌத் கரோ ஹில்ஸ்

சௌத் கரோ ஹில்ஸ் – கண்டுபிடிக்கப்படாத எழிற்காட்சிகள் ஏராளம்!

12

இந்தியாவில் மனிதர்களால் அதிகம் தரிசிக்கப்படாமல் ஒளிந்திருக்கும்  இயற்கை எழிற்பிரதேசங்களில் இந்த சௌத் கரோ ஹில்ஸ் பகுதியும் ஒன்று. மேகாலயா மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள இந்த மாவட்டம் இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்திற்கு வடக்கே ஈஸ்ட் கரோ ஹில்ஸ், கிழக்கே வெஸ்ட் காசி ஹில்ஸ், மேற்கே வெஸ்ட் கரோ ஹில்ஸ் போன்ற மாவட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. மேலும், இதன் தென்பகுதியை ஒட்டி பங்களாதேஷ் நாட்டின் சில பகுதிகள் அமைந்திருக்கின்றன.

அதிகம் அறியப்படாத மாவட்டம் என்பதால் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தேடிப்பார்க்க வேண்டிய பல அழகுக்காட்சிகளும், இயற்கை அம்சங்களும் ஏராளம் நிரம்பியுள்ளன.

மாநிலத்தின் முக்கியமான சாகச சுற்றுலாத்தலமாக இப்பகுதியை மாற்றுவதற்கு மேகாலயா மாநில அரசு தற்போது முயற்சிகளை எடுத்து வருகிறது. இங்கு சுற்றுலா ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சங்களாக பல்பக்ராம் நேஷனல் பார்க், சிடிமக் மற்றும் சிஜு கேவ் போன்றவை பிரசித்தமாக அறியப்படுகின்றன.  

முக்கிய சுற்றுலாத்தலங்கள்

நெங்கோங், பல்பக்ராம், இமில்சாங் டரே, டோம்வாரே, ஏமான்கிரே, சிம்சங் ஆறு போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான இடங்கள் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டம் முழுக்க விரவிக்கிடக்கின்றன.

எப்படி செல்லலாம்?

சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள இயற்கை எழில் ஸ்தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் பக்மாரா எனும் நகரத்தில் தங்கிக்கொண்டு தங்கள் சுற்றுலாவை விருப்பம்போல் திட்டமிட்டுக்கொள்ளலாம்.

இங்கிருந்து 55 கி.மீ தூரத்தில் மேகாலயா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான டுரா எனும் நகரமும் அமைந்திருக்கிறது. மேலும், பக்மாராவிலிருந்து 157 கி.மீ தூரத்தில் கவுஹாட்டி நகரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேருந்துகள் மூலம் இந்த  பக்மாரா நகரத்தை சென்றடையலாம்.

பருவநிலை

சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டம் வருடமுழுதுமே மிதமான பருவநிலையுடன் அதே சமயம் அபரிமிதமான மழைப்பொழிவுடன் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் கோடைக்காலத்தில் அதிக உஷ்ணம் நிலவுகிறது.

இந்த உஷ்ணத்தை தணிக்கும் வகையில் மழைக்காலம் வந்து சேர்கிறது. அதன் பின் குளிர்காலத்தில் இப்பகுதியில் மிதமான சூழல் நிலவுகிறது. எனவே பொதுவாக குளிர்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்வது சிறந்தது.

சௌத் கரோ ஹில்ஸ் சிறப்பு

சௌத் கரோ ஹில்ஸ் வானிலை

சிறந்த காலநிலை சௌத் கரோ ஹில்ஸ்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சௌத் கரோ ஹில்ஸ்

  • சாலை வழியாக
    There is no route available in சௌத் கரோ ஹில்ஸ்
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் முக்கிய நகரமான பக்மாராவுக்கு அருகில் 157 கி.மீ தூரத்தில் கவுஹாட்டி ரயில் நிலையம் உள்ளது. கவுஹாட்டியிலிருந்து டுரா நகரை அடைந்து பின் அங்கிருந்து பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் பயணிகள் பக்மாராவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கவுஹாட்டி விமான நிலையம் மூலமாக பயணிகள் இந்த சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யலாம். மேகாலயா மாநிலத்தில் உம்ரோய் எனும் ஒரே ஒரு விமான நிலையம் உள்ளது. இங்கு கல்கத்தாவிலிருந்து மட்டுமே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆனால் கவுஹாட்டி விமான நிலையம் நாட்டின் பல முக்கிய நகரங்களுடன் விமான சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City