டிரெக்கிங், ஸ்பிதி

டிரெக்கிங் அல்லது மலையேற்றம் ஸ்பிதி பிரதேசத்தின் மிக பிரசித்தமான பொழுது போக்கு அம்சமாக விளங்குகிறது. சாகசப்பொழுதுபோக்கு பிரியார் இங்கு அடிக்கடி விஜயம் செய்து பின் – பார்வதி பாஸ் எனும் மலைப்பாதையின் வழியாக மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.நன்கு அனுபவம் வாய்ந்த மலையேறிகளுக்கு மட்டுமே இப்பிரதேசம் ஏற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

காஸா – டபோ –சும்டோ-நாகோ பாதை, காஸா – லங்ஸா –ஹிகிம்-கோமிக்-காஸா பாதை, காஸா – லோஸார் –குன்ஸும் லா பாதை மற்றும் காஸா – கி –கிப்பர்-கெடே-காஸா பாதை போன்றவை இதர முக்கியமான மலையேற்றப்பாதைகளாகும். ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவம் ஸ்பிட்டி பகுதியில் டிரெக்கிங் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

Please Wait while comments are loading...