Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீரங்கப்பட்டணா » ஈர்க்கும் இடங்கள் » கும்பாஸ்

கும்பாஸ், ஸ்ரீரங்கப்பட்டணா

33

ஸ்ரீரங்கப்பட்டணா பயணத்தின்போது பயணிகள் மறக்காமல் இந்த ‘கும்பாஸ்’ என்றழைக்கப்படும் திப்புவின் அரண்மனைக்கும் விஜயம் செய்ய வேண்டும். 20 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டமைப்பு முக்கியமாக திப்பு சுல்தான் மற்றும் அவரது பெற்றோரான ஹைதர் அலி, ஃபாத்திமா பேஹம் ஆகியோர் புதைக்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது. இதர ராஜாங்க முக்கியஸ்தர்களும் திப்பு சுல்தானின் உறவினர்களும் கூட இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சமாதி மண்டபத்தின் கூரை கிரானைட் தளத்தால் ஆக்கப்பட்டுள்ளது.

 

அழகாக வடிவமைக்கப்பட்ட சுவர்களும் 36 கம்பீரமான தூண்களும் இந்த மண்டபத்திற்கு அழகூட்டுகின்றன. 220 ஆண்டுகள் வயதுடைய இந்த பழைய கோட்டை ஒரு உயரமான மேடைமீது எழுப்பப்பட்டு இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.

தேக்கு மரத்தாலான கும்பாஸ் கதவுகளை டல்ஹௌசி பிரபு வழங்கிய தந்தங்கள் அலங்கரிக்கின்றன. தங்கத்தாலும் வெள்ளியாலும் உருவாக்கப்பட்ட மூன்று கதவுகள் ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆக்கிரமித்தபின் லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தற்சயம் லண்டன் ஆல்பெர்ட் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் இங்கு கும்பாஸ் கோட்டையை சுற்றிப்பார்க்கும் போது நினைவுகூரலாம்.

மினுமினுக்கும் புலித்தோல் வண்ண வரிகள் பூசப்பட்ட உட்புறச்சுவர்களும், அரிதான கறுப்பு சலவைக்கல்லால் ஆன தூண்களும் இங்குள்ள மைய மண்டபத்தை அலங்கரிக்கின்றன. ரங்கநாதஸ்வாமி கோயில் மற்றும் ஜுமா மசூதி இரண்டுமே இந்த நினைவுச்சின்ன வளாகத்துள் அமைந்துள்ளன.

இந்த ஸ்தலம் ஒரு அழகான தோட்டப்பூங்காவுக்கு நடுவே மஸ்ஜித்-இ-அக்ஸா எனும் மசூதிக்கருகில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat