தலக்காடு பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இங்கு 1911ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோயிலையும் தரிசிக்க வேண்டியது அவசியம். இது விஷ்ணுவர்த்தன் எனும் ஹொய்சள மன்னரால் கட்டப்பட்டு கீர்த்தி நாராயணா மற்றும் ரங்கநாதர் சிலைகள் கோயிலுள் அவராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆதியில் சுந்தரவல்லி தாயார் சன்னதியும் இந்த கோயிலில் இருந்துள்ளது. அது பின்னர் நவரங்க மண்டபமாக மாற்றப்பட்டு கீர்த்தி நாராயணாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகரின் சிலைகளும் காணப்படுகின்றன.
விஸ்வநேசர் மற்றும் யோக நரசிம்மர் சிலைகளைக்கொண்டுள்ள அர்த்த மண்டபமும் இந்த கோயிலினுள் அமைந்துள்ளது.9 அடி உயரம் கொண்ட விஷ்ணுவுன் சிலை இந்த கீர்த்தி நாராயணா கோயிலின் விசேஷமான அம்சமாகும்.இந்த சிலை ஒரு கருட பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களிலும் சக்கரம், கதை, தாமரை மலர், சங்கு போன்றவற்றுடன் இந்த சிலை காட்சியளிப்பதை பக்தர்கள் காணலாம்.



Click it and Unblock the Notifications