Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலக்காடு » ஈர்க்கும் இடங்கள் » வைத்யநாதேஸ்வரா கோயில்

வைத்யநாதேஸ்வரா கோயில், தலக்காடு

23

தலக்காடு ஸ்தலத்துக்குவ் விஜயம் செய்யும் பயணிகள் மற்றும் பக்தர்கள் நேரம் இருப்பின் இங்குள்ள வைத்யநாதேஸ்வரா கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியம். இங்கு மனோன்மணி தெய்வம், முருகன் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன.

கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மண்டபத்தில் துர்க்கை, சிரத்தாம்பிகை, நடராஜர், பத்ரகாளி மற்றும் காளிகாம்பாள் போன்றோரின் சிலைகளையும் பார்க்கலாம். மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இந்த கோயில் சோழர்களின் ஆட்சியின்போது 14ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.நவரங்கா எனப்படும் பிரதான வாயிலில் இருபுறமும் பெரிய அளவிலான துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன. கோயிலின் கிழக்கு வாயிலானது நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இங்கு கருவறையில் ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளது.

இதன் பின் புறத்தில் சிவபெருமானின் திருமுகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வதி, விஷ்ணு, அலமேலுமங்கா, ருத்ராக்‌ஷங்களுடன் காட்சியளிக்கும்  ஷிவலிங்கம், காளிகாம்பாள் மற்றும் கணேசா போன்ற சிலைகளும் கருவறை சிவலிங்கத்துக்கு அருகில் காணப்படுகின்றன.கோயில் பிரகாரத்தில் பல வடிவங்களில் அமைந்த சிவலிங்கங்களை பார்க்க முடிகிறது. ஷண்முகா, வினாயகா, சாமுண்டீஸ்வரி, சண்டீகேஸ்வரா மற்றும் மனோன்மணி போன்றோரின் சன்னதிகளும் இந்த கோயிலுள் காணப்படுகின்றன.

சிவனின் வாகனமான நந்திக்கென்று ஒரு சிறு சன்னதியும் கோயில் உச்சியில் காணப்படுகிறது. தலக்காட் ஸ்தலத்தின் ஐந்து முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்த வைத்யநாதேஸ்வரர் கோயிலுக்கு பஞ்சலிங்க தரிசனத் திருநாளின்போது ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri