Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமெங்லாங் » வானிலை

தமெங்லாங் வானிலை

தெமங்லாங் வருவதற்கு மிகவும் ஏற்ற சீசனாக மழைக்காலம் முடிந்து தொடங்கும், அக்டோபர் முதல் மார்ச் மாதங்கள் உள்ளன. அந்நாட்களில் போதுமான அளவு வெப்பத்திற்கேற்ற ஆடைகளை கொண்டு வருவது நல்லது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோடைக்காலத்தின் முடிவில் தெமங்லாங் வருவதற்கு திட்டமிடுவார்கள். எனினும், போக்குவரத்து கடுமையானதாக மாறிவிடும் மழைக்காலங்களில் தெமங்லாங்கிற்கு சுற்றுலா வருவதை தவிர்த்தல் நலம்.

கோடைகாலம்

தெமங்லாங் மாவட்டத்தின் மலைப்பாங்கான புவியியலமைப்பின் காரணமாக அதன் கோடைக்காலம் இனிமையானதாகவே இருக்கும். எனினும் அவ்வப்போது அதிக அளவு வெப்பநிலை நிலவி வரும். தெமங்லாங்கில் மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடைக்காலம் மே மற்றும் ஜுன் மாதங்கள் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 32°C வரை அதிகரிக்கும். மே மற்றும் ஜுன் மாதங்கள் மிகவும் வெப்பமான மாதங்களாக உள்ளன.

மழைக்காலம்

தெமங்லாங்கின் மழைக்காலத்தில் தொடர்ச்சியான மழைப்பொழிவு முழுமையாக இருக்கும். ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். தென் மேற்கு பருவக்காற்று இந்த பகுதிக்கு அதிக மழைப்பொழிவை தருவதாக உள்ளது. ஆனால், மழைக்காலம் முடிந்த பின்னர், மின்னும் இந்த மலைப்பாங்கான மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்குவார்கள்.

குளிர்காலம்

கோடைக்காலம் மிகவும் வெப்பமாக இருக்கும் அதே வேளையில், குளிர்காலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை பூஜ்யத்திற்கு வரும் நாட்களும் உண்டு. குளிர்காலத்தில் தெமங்லாங் வரும் சுற்றுலாப் பயணிகள், கம்பளி ஆடைகளை கொண்டு வருவது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குளிர்காலம் மிகவும் சில்லென்றிருக்கும் என்பதை நினைவில் கொள்வதும் நல்லது.