Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தவாங் » வானிலை

தவாங் வானிலை

வருடத்தின் பெரும்பான்மையான மாதங்களில் தவாங் மலைநகரம் மிதமான பருவநிலையையே கொண்டிருக்கிறது. பொதுவாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் காணப்படுகிறது.

கோடைகாலம்

தவாங் நகரத்தில் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. மிதமான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 22°C வரை வெப்பநிலை நிலவுகிறது. ஜூன் மாதமே இங்கு வெப்பம் அதிகமான மாதமாகும்.  

மழைக்காலம்

ஜுலை மாதம் துவங்கி செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் பரவலான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. இக்காலத்தில் சுற்றுச்சூழல் ஈரத்துடன் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் தொடங்கி  பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தின்போது தவாங் நகரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. இக்காலத்தில் 10°C  துவங்கி மிகக்குறைவாக -13°C  வரை வெப்பநிலை இறங்கக்கூடும். ஜனவரி மாதத்தில் குளிர் உச்சத்தில் காணப்படும்.