கோல் பூங்கா சித்ரலேகா பூங்கா என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியராகவும், இளவரசி உஷாவின் தோழியாகவும் விளங்கிய சித்ரலேகாவின் நினைவாக இப்பூங்காவிற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
குதிரை கடிவாள வடிவில் அமைந்துள்ள ஏரி இந்த பூங்காவின் மையப்பகுதியில் உள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள பச்சைப்பசேலென்ற பரந்த நிலம் இயற்கை எழிலுடன் விளங்குகிறது. இங்குள்ள பச்சைப் புல்வெளியில் அமர்ந்து இளைப்பாறுவது புத்துணர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.
பிரம்மபுத்திரா நதியின் மேல் கட்டப்பட்டுள்ள பழங்கால பாலங்களைப் பற்றிய பொமொரகுரி கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. பழைய பொமொரகுரி திட்டங்கள் மட்டுமல்லாது தற்காலத்தில் உள்ள கொலியா பொமொரா பாலத்தைப் பற்றிய தகவலும் இங்கே பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுளது.
மேலும் பமுனி குன்றின் மிச்சங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு கல் ஆபரண தூண்களும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications