தானே மாவட்டத்தில் உள்ள பிரசித்தமான அம்யூஸ்மெண்ட் பார்க் இந்த எஸ்ஸல் வேர்ல்ட் ஆகும்.இது கோராய் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
இங்கு 34 விதமான பொழுதுபோக்கு சவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயின்போ, பம்பிங் கார்ஸ் மற்றும் ரோலர் கோஸ்டர் சவாரி போன்றவை இந்த பார்க்கில் உள்ளன.
எஸ்ஸல் வேர்ல்டுக்கு அருகில் வாட்டர் கிங்டம் உள்ளது. இங்கு ஆசியாவிலேயே பெரிய ‘வேவ் பூல்’ அமைக்கப்பட்டுள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்றபடியான கேளிக்கை அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
இந்த பார்க் பயந்தர், போரிவலி அல்லது மார்வே பகுதியிலிருந்து எளிதில் செல்லும்படியான பஸ் வசதிகளுடன் காணப்படுகிறது.