Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தானே » வானிலை

தானே வானிலை

தானே பகுதியின் பருவநிலை ஏறக்குறைய மும்பையைப் போன்றே உள்ளது. பொதுவாக ஈரப்பதம் மிகுந்ததாகவும் வெப்பப் பிரதேசமாகவும் காணப்படுகிறது. ஆகவே கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது மிகுந்த அசௌகரியமாக இருக்கும் என்பதால் அக்காலத்தை தவிர்ப்பது நல்லது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டம் மழைக்குபிந்தைய பருவமாகவும் குளிர்காலமாகவும் விளங்குவதால் அச்சமயம் இப்பகுதியில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாகும்.

கோடைகாலம்

மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை தானே பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு 320C முதல் 400Cவரை வெப்பநிலை நிலவுகிறது. எனினும் அரபிக்கடல் அருகில் இருப்பதால் இப்பிரதேசம் அதிகம் வெப்பமடையாமல் காக்கப்படுகிறது.

மழைக்காலம்

கோடைக்காலத்திற்கு அடு த்த தாக இங்கு ஒரு இனிமையான  மாறுதலாக மழைக்காலம் வருகிறது. தானே பகுதியில் மழைக்காலம் மார்ச்சிலிருந்து ஜூன் மாதம் வரை நீடிக்கிறது. அச்சமயம் தென்மேற்கு பருவக்காற்றுகளின் மூலம் நல்ல மழையை தானே பகுதி பெறுகிறது. ஜுலை மாதம் ஈரம் மிகுந்ததாக காணப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை தானே பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. எல்லா வறண்ட பிரதேசங்களையும் போல் இங்கும் குளிர்காலமே சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக விளங்குகிறது. குளிர்காலத்தில் சராசரியாக 150C அல்லது குறைந்தபட்சம் 80C வரையில் வெப்பநிலை காணப்படுகிறது.