ஆர்யங்காவு அல்லது மேற்குத்தொடர்ச்சி மலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து கிழக்கே 73 கி.மீ தூரத்தில் உள்ளது.
தேன்மலாவை ஒட்டியே உள்ள இந்த ஆர்யங்காவு எனும் கிராமம் கொல்லம் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாக பெயர் பெற்று விளங்குகிறது.
ஆர்யங்காவு பகுதியின் பிரதான விசேஷம் இங்குள்ள பாலருவி எனும் நீர்வீழ்ச்சியாகும். மதர் ஆஃப் லேடி சர்ச், செயிண்ட் மேரி ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் செயிண்ட் மலங்கரா கத்தோலிக்க சர்ச் போன்ற தேவாலயங்களும் இதர ஆன்மீக அம்சங்களாக இங்கு பிரசித்தி பெற்றுள்ளன.
ஐயப்பன் குடிகொண்டிருக்கும் ஆர்யங்காவு சாஸ்தா கோயில் அதன் ஆன்மீக முக்கியத்துவத்துக்காக மட்டுமன்றி உன்னதமான கோயில் வடிவமைப்பிற்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. மண்டலபூஜையின்போது இக்கோயிலில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டு வந்து ஐயப்பனை வணங்குகின்றனர்.
ஆர்யங்காவு ஸ்தலத்தில் இன்னும் ஏராளமான விசேஷ அம்சங்களும் நிறைந்துள்ளன. நாட்டிலேயே இரண்டாவது பெரிய சந்தனக்காடு என்று அறியப்படும் கடமண்பாறா சந்தனக்காடு இந்த கிராமத்தில் உள்ளது.
ரோஸ்மலா எனும் இயற்கைச்சுற்றுலா மையம் ஒன்றும் ஆர்யங்காவு கிராமத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்படி ஏராளமான கவர்ச்சி அம்சங்களுடன் ஆர்யங்காவு பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.



Click it and Unblock the Notifications