தமிழ்நாட்டின் பிரதான புண்ணியஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் கோவிலின் மூலக்கடவுள் சிவன் ஆவார். இந்துக்கள் இக்கோவிலில் சிவனை கைலாசநாதராக வழிபடுகிறார்கள்.
சந்திர பகவானுக்கான பிரத்யேக வழிபாட்டுத்தளமும் இக்கோவிலின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தமிழில் திங்கள் என்றால் நிலா என்று பெயர். அதனாலேயே இவ்வூர் திங்களூர் என்று பெயர் பெற்றது.
ஐந்து மாடிகள் கொண்ட ராஜகோபுரத்துடன் எழில்மிகு தோற்றம் கொண்ட கைலாசநாதர் கோவில் முழுக்க முழுக்க தமிழ் கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. அப்பர் முதலிய பலர் இயற்றிய தமிழ் இலக்கியப் பாடல்களில் இக்கோவில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் அப்பர் தன் பாடல்களில் இக்கோவிலின் மூலக்கடவுளைக் குறிப்பிடாததால் இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலம் என்ற புகழைப் பெறவில்லை.
இந்து யாத்ரீகர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஸ்தலமாக இக்கைலாசநாதர் கோவில் விளங்குகிறது. வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிவனையும், தங்கள் ஜாதகக் குறைகள் நீங்குவதற்காக சந்திரபகவானையும் வேண்டிக் கொள்வதற்காக இங்கே குழுமுகிறார்கள்.



Click it and Unblock the Notifications