Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருமணச்சேரி » வானிலை

திருமணச்சேரி வானிலை

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலம் திருமணச்சேரிக்கு பயணம் செய்வதற்கான சிறந்து இரண்டு காலகட்டங்களில் ஒன்று. பருவ மழையில் சற்றே நனைந்த  இந்த நிலப்பரப்பு காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைகின்றது. அக்டோபர் முதல் மார்ச் வரை தட்பவெப்பம் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கும், அதுவே திருமணச்சேரிக்கு வருகை தருவதற்கு சிறந்த காலகட்டம் ஆகும்.

கோடைகாலம்

தமிழகத்தின் பிற பகுதிகளை போல திருமணச்சேரியிலும் கோடைக்காலம் மிகவும் கடுமையாக இருக்கின்றது. தட்பவெப்பம் 42 டிகிரி செல்சியஸ் வரை உயருகின்றது. திருமணச்சேரிக்கு எல்லா காலத்திலும் பயணம் செய்யலாம், என்றாலும் கோடைக்காலம் அதற்கு உகந்தது அல்ல. கோடைக்காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கின்றது.

மழைக்காலம்

திருமணச்சேரியில் மழைக்காலம் சற்று மிதமாகவே இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை திருமணச்சேரியில் மழைக்காலம் நீடிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

குளிர்காலம்

திருமணச்சேரியில் குளிர்க்காலத்தின் போது தாங்கக்கூடிய அளவுக்கு தட்பவெப்பம் குறைந்து 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நீடிக்கின்றது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் இந்த பருவ காலம், இங்கு பயணம் மேற்கொள்ள ஒரு சிறந்த காலகட்டம் ஆகும்.