Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவல்லா » வானிலை

திருவல்லா வானிலை

வெப்ப மண்டலத்தில் அமைந்திருந்தாலும், பசுமையான இயற்கைச்சுழலின் மத்தியில் வீற்றிருப்பதால் திருவல்லா நகரம் மிதமான பருவநிலை மற்றும் சூழலை கொண்டுள்ளது. இருப்பினும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் இந்நகரத்துக்கு விஜயம் செய்ய மிகவும் ஏற்றதாக உள்ளது. மிதமான வெப்பநிலையுடன் கூடிய குளுமையான சூழல் இப்பருவத்தில் காணப்படுகிறது.

கோடைகாலம்

மே மாதம் முதல் ஜூன் வரை திருவல்லா நகரில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 34° C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 26° C யும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் திருவல்லாவுக்கு விஜயம் செய்வது சற்றே அயர்ச்சியூட்டுவதாகவே இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் திருவல்லாவில் கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் துவங்கி நான்கு மாதங்களுக்கு மழைக்காலம் இப்பகுதியில் நீடிக்கின்றது. அதிக மழை பொழிவதால் இக்காலத்தில் பசுமையாக ஜொலிக்கும் நகரத்தின் எழிலை பார்த்து ரசிக்கலாம்.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை திருவல்லாவில் குளிர்காலம் நீடிக்கிறது. இனிமையான, விரும்பத்தக்க கடுங்குளிர் இக்காலத்தில் நிலவுகிறது. குறைந்தபட்சம் 18° C முதல் அதிகபட்சம் 24° C வரையிலன வெப்பநிலை இக்காலத்தில் காணப்படும். குளிர்காலத்தில் திருவல்லாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குளிருக்கான விசேஷ உடைகளுடன் செல்வது நல்லது.