விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோவில் இந்த நெடுங்குணம் ராமர் கோவில். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய விஷ்ணு கோவில் இதுவே.
இக்கோவில் குறைந்தபட்சம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது கட்டப்பட்ட பிறகு பல மன்னர்களால் மறுகட்டுமானம் செய்யப்பட்டது.
ராமர் தன் கையில் வில் இல்லாமல், அமர்ந்த நிலையில் இருக்கும் சிற்பமே இந்த கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த அமர்ந்த நிலையை யோக ராமர் என்றும், அவருடைய கரம் மார்புக்கு அருகே வைக்கப்பட்டு இருப்பது ஞானமுத்திரை நிலை என்றும் அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஆஞ்சநேயர் அல்லது அனுமான், ராமருக்கு முன்பாக அமர்ந்து, இலைகளில் எழுதப்பட்ட பிரம்மசூத்திரத்தை படித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கங்களின் தலைகள் செதுக்கப்பட்ட பீடத்தில் ராமருக்கு அருகே அவருடைய துணைவி சீதை அமர்ந்து இருக்கிறார்.
வேறு எங்கும் காணாத வடிவத்தில் ராமர் சிலை இங்கு அமைந்து இருப்பதால், பக்தர்களை கவரும் முக்கிய இடமாக இது இருக்கிறது.



Click it and Unblock the Notifications