திரிசூர் நகரிலிருந்து 1 மணி நேர பயணத் தூரத்தில் உள்ள ஆராட்டுபுழா எனும் கிராமத்தில் இந்த ஆராட்டுபுழா கோயில் அமைந்துள்ளது. ஐயப்ப பஹவானுக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
அற்புத சக்தி நிரம்பிய தெய்வமாக கருதப்படுவதால் இந்த ஐயப்பன் கோயிலுக்கு வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இருப்பினும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் பூரம் திருவிழாக்காலத்தில் இங்கு இன்னும் திரளாக பக்தர்கள் கூடி ஐயப்பனை வழிபடுகின்றனர்.
இந்த திருவிழாவின் ஏழாவது நாளில் ஐயப்பன் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆராட்டுப்புழா ஆற்றில் திருக்குளியல் செய்வித்து கொண்டு வரும் சடங்கு பின்பற்றப்படுகிறது.



Click it and Unblock the Notifications