கேரளாவில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்று இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் இக்கோயில் துர்க்கா மாதாவின் அவதாரமான பகவதி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகவதி அம்மன் தெய்வம் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பூரம் திருவிழாவின் போது வடக்கும்நாதன் கோயிலுக்கு விஜயம் செய்து சிவபெருமானை சந்திப்பதாக ஒரு ஐதீகமும் நிலவுகிறது.
பூரம் திருவிழாவில் பங்கு கொள்ளும் இரண்டு முக்கியமான கோயில்களில் இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பூரம் திருவிழா பிரம்மாண்ட கோலாகல யானை ஊர்வலங்களோடு கொண்டாடப்படுவதோடு திரிசூர் நகரின் பாரம்பரிய அடையாளமாகவும் அறியப்படுகிறது.
இந்த பகவதி அம்மன் கோயில் காலை 4.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications