Search
 • Follow NativePlanet
Share

பாலக்காடு - நெற்களஞ்சியத்துக்கு ஓர் உல்லாச சுற்றுலா

25

கேரளாவில் மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் அரிசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றி வரும் பாலக்காடு மாவட்டம் 'கேரளாவின் நெற்களஞ்சியம்' மற்றும் 'தானியக் களஞ்சியம்' என்ற சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த நகரம் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும், அடர்ந்த வெப்ப மண்டல காடுகளும், மலைக் குன்றுகளும் சூழ அமைந்திருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

பாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு சுரம், கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து வருபவர்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கும் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது.

அதோடு கேரளாவின் மற்ற மாவட்டங்களை போல் அல்லாமல் பாலக்காடில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருவதால் தனித்துவமான கலாச்சாரத்தினை இந்த நகரம் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் பாலக்காடில் நீங்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கலவையில் மாறுபட்ட உணவு வகைகளை ருசிக்கலாம்.

பாலக்காடு மாவாட்டத்தின் தனிச் சிறப்புக்கு அதன் பாரம்பரிய கர்நாடக சங்கீதமும், கலாச்சார திருவிழாக்களுமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த மாவட்டத்தில் பிறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் மற்றும் பாலக்காடு மணி ஐயர் ஆகிய இரண்டு கர்நாடக இசை மேதைகளால் பாலக்காடு மாவட்டம் இந்தியா முழுக்க உள்ள இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது.

பாலக்காடில் கோட்டைகள், கோயில்கள், அணைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருவிகள், பூங்காக்கள் என்று பயணிகளுக்கு எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் காத்துக்கிடக்கின்றன.

இவற்றில் பாலக்காடு கோட்டையும், ஜெயின் கோயிலும் வரலாற்றுப் பிரியர்களை அதிகமாக ஈர்க்கும் இடங்கள். இவைதவிர மலம்புழா அணை மற்றும் தோட்டத்துடன் கூடிய கேளிக்கை பூங்கா புகழ்பெற்ற பிக்னிக் தலமாக விளங்கி வருகிறது.

நெல்லியம்பதி மலைவாசஸ்தலம், சைலன்ட் வேலி தேசிய பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை இயற்கை ரசிகர்களுக்கும், காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடங்களாக இருப்பதுடன், மறக்க முடியாத விடுமுறை அனுபவமாகவும் இருக்கும்.

மேலும், காஞ்சிரப்புழா, தோணி அருவி, ஒட்டப்பாலம், கொல்லேன்கோடு அரண்மனை, தென்குருசி போன்ற இடங்களும் நீங்கள் பாலக்காடு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

பாலக்காடு நகரை ரயில் மற்றும் சாலை மூலமாக எளிதாக அடைந்து விடலாம். அதோடு இந்த நகரின் வெப்பநிலை கோடை காலத்தை தவிர மற்ற காலங்களில் மிகவும் இதமானதாகவே இருக்கும்.

இந்த மாவட்டத்தின் பாரம்பரியமும், இயற்கை காட்சிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் பாலக்காடு மாவட்டத்தை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.

பாலக்காடு சிறப்பு

பாலக்காடு வானிலை

பாலக்காடு
20oC / 68oF
 • Haze
 • Wind: NNE 6 km/h

சிறந்த காலநிலை பாலக்காடு

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது பாலக்காடு

 • சாலை வழியாக
  பாலக்காடு நகருக்கு கோயம்பத்தூர், கொச்சி, கோழிக்கோடு, திரிசூர் போன்ற நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சொகுசு மற்றும் வால்வோ பேருந்துகளும் பாலக்காடு நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பாலக்காடு ரயில் நிலையம் ஒலவக்கோடு ரயில் நிலையம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் கேரளாவின் அனைத்து நகரங்களுடனும், பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  பாலக்காடு நகரிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் கோயம்பத்தூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக பாலக்காடு நகரை அடையலாம். மேலும் பாலக்காடு நகரிலிருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தையும், 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  திசைகளைத் தேட

பாலக்காடு பயண வழிகாட்டி

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
17 Jan,Thu
Check Out
18 Jan,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
 • Today
  Palakkad
  20 OC
  68 OF
  UV Index: 11
  Haze
 • Tomorrow
  Palakkad
  19 OC
  67 OF
  UV Index: 11
  Partly cloudy
 • Day After
  Palakkad
  19 OC
  67 OF
  UV Index: 11
  Sunny