Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலக்காடு » ஈர்க்கும் இடங்கள் » பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம்

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், பாலக்காடு

25

பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமான பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு தெற்கு பகுதியில், சங்கம் மலை தொடர்களுக்கு குறுக்காக அமைந்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் கவர்ச்சிகரமான காட்டுப் பகுதியில் ஏராளமான விலங்குகளையும், எண்ணற்ற தாவர வகைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மையப்பகுதி, இடைப்பகுதி, சுற்றுலாப்பகுதி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் புலி, சிறுத்தை, ஆசிய யானை, காட்டெருமை, கண்ணாடி விரியன், நீலகிரி நீலவால் குரங்கு, சாம்பார் மான், புள்ளி மான், இந்திய காட்டு நாய், ஆமை போன்ற ஜீவ ராசிகளை கண்டு ரசிக்கலாம்.

மேலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் சலீம் அலி பேர்ட் இன்டெர்பிரட்டேஷன் சென்டர் மற்றும் சலீம் அலி கேல்லி போன்ற இடங்கள் பறவை காதலர்களுக்கு பொருத்தமான இடமாக இருக்கும்.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் நடைபயணம் செல்வதற்கு மிகவும் ஏற்ற இடம். அதோடு இயற்கையின் மறைத்துவைக்கப்பட்ட அற்புதங்களை ஆழமாக உள்ளே சென்று அறிய விரும்பும் சாகச நெஞ்சங்களின் வருகைக்காக  ஜங்கிள் கேம்ப்ஸ், நைட் பேக்கேஜஸ், நேச்சர் எஜுகேஷன் பேக்கேஜஸ், போட் குரூசஸ், டிரீ ஹௌசஸ் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue