அத்வைத ஞானியான ஸ்ரீ ஆதி சங்கரர் சமாதியடைந்த ஸ்தலமே இந்த சங்கர சமாதி ஆகும். கி.பி 820 ம் ஆண்டில் தன் 32வது வயதில் ஆதிசங்கரர் திரிசூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதே ஸ்தலத்தில் ஒரு சிறு கோயிலும் பக்தர்கள் வழிபடுவதற்காக ஆதிசங்கரின் அழகான உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இந்த ஸ்தலம் ஆதி சங்கரரின் ஆன்மீக பிரகாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது.
ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாதவராயினும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஸ்தலத்தின் எழிலை ரசிப்பதற்காகவாவது இங்கு விஜயம் செய்வது அவசியம். உணர்வுகளை சாந்தப்படுத்தும் அசாதாரண சூழல் அதிர்வை இப்பகுதியில் கண்டிப்பாக இப்பகுதியில் உணரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications