Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டோங்க் » வானிலை

டோங்க் வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலப்பருவமே டோங்க் வரலாற்றுஸ்தலத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இருப்பினும் குறைந்த வெப்பநிலை நிலவும் மழைக்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜுன் வரை): டோங்க் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. வறட்சி நிலவும் இந்த கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 26° C முதல் அதிகபட்சமாக 45° C வரை வெப்பநிலை நிலவுகிறது. பொதுவாகவே 30° C வெப்பம் நிலவும் இக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்புவதில்லை.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): மழைக்காலத்தில் டோங்க் பிரதேசத்தின் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கிறது. ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை மழைகாலம் நீடிக்கிறது. தார்ப்பாலைவனப்பகுதியில் அமைந்திருப்பதால் டோங்க் மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. குறைந்த வெப்பநிலை நிலவுவதால் இக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்ளவும் ஏற்றதாக உள்ளது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): டோங்க் பிரதேசத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. மிதமான பருவநிலை நிலவும் இக்காலத்தில் டோங்க் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய சுற்றுலாப்பயணிகள் விரும்புகின்றனர். சராசரி வெப்பநிலை 15° C முதல் 22° C வரை இக்காலத்தில் நிலவுகிறது.