Search
  • Follow NativePlanet
Share

தோரண்மால் - விந்தையான கவர்ச்சியுடைய மலைவாசஸ்தலம்

10

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.  சத்புரா  மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ஒரு பீடபூமி போன்று உச்சியில் 44 ச.கி.மீ பரப்பளவில் இந்த தோரண்மால் அமைந்துள்ளது.

இந்த மலைவாசஸ்தலம் தோர்ணா எனும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஐதீக நம்பிக்கைகளின்படி இந்தப்பிரதேசம் முழுக்க தோரணா மரங்களால் நிரம்பியிருந்ததாகவும் இங்கு வசித்த ஆதிகுடிகள் தோரணா மரத்தை பெண்மையின் வடிவமாக தோர்ணா தேவி என்றே வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பல விசேஷ அம்சங்களில் யஷ்வந்த் ஏரி முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்று விளங்குகிறது. அது தவிர ஏராளமான கோயில்கள் இங்கு உள்ளன. கோரக்நாத் மற்றும் நாகார்ஜுனா கோயில்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

சீதாகாய் எனும் அழகிய பள்ளத்தாக்கு, காட்கி பாயிண்ட் மற்றும் சன்செட் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் போன்றவையும் இங்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன.

தோர்ணமால் – விசேஷ தகவல்கள்

மலையின்மீது அமர்ந்திருப்பதால் இந்த தோரண்மால் மலைவாசஸ்தலம் வருடமுழுதுமே அற்புதமான பருவநிலையை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதால் ஒரு நல்ல விடுமுறை சுற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.

பல அற்புதமான ஏரிகளையும், மலைக்காட்சி தளங்களையும் இது கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையேற்றத்துக்கு உகந்த மலைப்பாதைகளும் இங்கு உள்ளன. நகரச்சந்தடிகளிலிருந்து விலகி அமைதியையும் இயற்கைச்சூழலையும் அனுபவிக்க தோதான சிறிய மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.

தோரண்மால் சிறப்பு

தோரண்மால் வானிலை

சிறந்த காலநிலை தோரண்மால்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தோரண்மால்

  • சாலை வழியாக
    மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் தோரண்மால் மலைவாசஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன. மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் தோரண்மாலுக்கு உள்ளன. பயணக்கட்டணங்கள் பேருந்து வசதியைப்பொறுத்து அமைந்துள்ளன. தோராயமாக 500 ரூபாய் என்ற அளவில் குளிர்சாதன பேருந்துக்கட்டணங்கள் இருக்கலாம். மும்பையிலிருந்து 461 கி.மீ தூரத்தில் தோரண்மால் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நந்தூர்பார் ரயில் நிலையம் தோரண்மாலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மேற்கு ரயில்வேயின் சூரத் – பூஸ்வால் ரயில் பாதையில் அமைந்துள்ளது. இது தவிர 141 கி.மீ தூரத்தில் உள்ள துலே ரயில் நிலையமும் தோரண்மால் செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. நந்தூர்பாரிலிருந்து சென்னை, அஹமதாபாத், மும்பை, அம்ராவதி மற்றும் சூரத் போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. சராசரி ரயில் கட்டணமாக 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தோரண்மால் மலைவாசஸ்தலத்திலிருந்து 300கி.மீ தூரத்தில் ஔரங்காபாத் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து தோரண்மால் வருவதற்க்கு டாக்சிகள் மற்றும் வேன் வசதிகள் கிடைக்கின்றன. இது தவிர மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையமும் அருகில் அமைந்துள்ளது. இந்த இரண்டு விமான நிலையங்களிலிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்கள் போன்றவற்றுக்கு ஏராளமான விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City