Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில இப்படியொரு சூப்பர் நீர்வீழ்ச்சியா - அடிக்கிற வெயிலில இருந்து தப்பிக்க செம டிராவல் பிளான்!

சென்னைக்கு பக்கத்தில இப்படியொரு சூப்பர் நீர்வீழ்ச்சியா - அடிக்கிற வெயிலில இருந்து தப்பிக்க செம டிராவல் பிளான்!

சாதாரணமாகவே சென்னையில் வெயில் ஜாஸ்தி என்று தான் சொல்லுவார்கள்! அதுவும் இப்போது அடிக்கிற வெயிலை பற்றி சொல்லவே வேண்டாம், இது பற்றாது என இப்போது ஏதோ 'ஹீட் அலை' (heat wave) ஒன்று உருவாகிறதாம்! அதனால் சென்னையில் வெயில் 40 இல் இருந்து 45 டிகிரி வரை செல்லும் என்கிறார்கள்.

இந்த வெயிலில் இருந்து தப்பிச்சு சென்னைக்கு பக்கத்தில கிட்டதட்ட 270 அடி உயரத்தில இருந்து' ஆர்பரித்து கொட்டுகிற தலகோனா நீர்வீழ்ச்சியில ஜம்முன்னு ஒரு குளியலை போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும் இல்லையா! இந்த இடத்திற்கு செல்ல நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை ரூ.600 இல் இருந்து ரூ.1000 இருந்தால் போதும், அதே போல ஒரே நாளில் சென்று வரக்கூடிய ஸ்பாட் என்பதால் நீங்கள் லீவு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த அசத்தலான ஸ்பாட்டுக்கு எப்படி செல்வது என்று பார்ப்போமா?

talkonawaterfallscover

சென்னைக்கு பக்கத்தில இருக்கிற பிரமாண்டமான நீர்வீழ்ச்சி

சென்னைக்கு பக்கத்தில எங்கடா இருக்கு நீர்வீழ்ச்சி என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் சென்னைக்கு பக்கத்தில் ஒரு இரண்டு முதல் மூன்று மணி நேர பயண தூரத்தில் நீங்கள் சென்று பார்த்து ரசித்து குளிக்கக்கூடிய நீர்வீழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று தான் சென்னையிலிருந்து 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அழகான தலகோனா நீர்வீழ்ச்சி. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தலகோனா நீர்வீழ்ச்சி ஆந்திராவில் ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகும். ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சிகளிலேயே உயரமான நீர்வீழ்ச்சியான தலகோனா ஆண்டின் எல்லா நாட்களிலும் நீர்வரத்துடன் காணப்படுகிறது.

சென்னையிலிருந்து அசத்தலான ஒரு நாள் ட்ரிப்

சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய தூரத்தில் அமைந்துள்ள தலகோனா நீர்வீழ்ச்சிக்கு ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களிலிருந்தும் பெரும்பாலான மக்கள் வருகை தருகின்றனர். நீங்கள் சென்னையின் எந்த பகுதியில் இருந்தாலும் தலகோனா நீர்வீழ்ச்சி என Google maps இல் டைப் செய்தால் நீங்கள் செல்ல வேண்டிய சரியான பாதை அதில் வந்து விடுகிறது. இது ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் நீங்கள் பயமின்றி Google maps சொல்லும் பாதையிலேயே பயணிக்கலாம். இல்லையேல் சென்னை-மாதவரம்-செங்குன்றம்-ஊத்துக்கோட்டை-பாலமங்கலம்-நாரயனவனம் என சேஷாச்சல காடுகளுக்குள் சென்று தலகோனா நீர்வீழ்ச்சியை அடையலாம்.

talakonawaterfalls

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை நீர் குளியல்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் அமைந்துள்ள தலகோனா நீர்வீழ்ச்சி இப்பகுதியில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி மற்றும் பிரபலமான சுற்றுலா தலமாகும். நீர் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது மற்றும் அறியப்படாத நிலத்தடி நீரோடையிலிருந்து வருகிறது. இயற்கை அழகு மற்றும் பசுமையால் சூழப்பட்ட அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. தலகோனா நீர்வீழ்ச்சியின் நீர் குணப்படுத்தும் சக்திகளுடன் கூடிய மூலிகைகளால் செறிவூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இங்கு குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.

talakonawaterfalls

ட்ரெக்கிங்கிலும் நீங்கள் ஈடுபடலாம்

சுற்றுப்புறத்தின் அமைதி மற்றும் நீர்வீழ்ச்சியின் இசை ஒலி இரண்டும் சேர்ந்து நம் மனதுக்கு அமைதியை தருகிறது. தலகோனா நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான மலையேற்ற இடமாக இருப்பதால், அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் பல மலையேற்ற பாதைகளை கொண்டுள்ளது. நீங்கள் அங்கே ட்ரெக்கிங் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். மெயின் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள இடத்திற்கு சென்றும் கூட நீங்கள் குளிக்கலாம். அந்த இடத்தில் இருந்து பார்த்தால் சுற்றிலும் பசுமை, நீர்வீழ்ச்சியின் சாரல், அழகிய காட்சிகள் என உங்கள் மனது கொள்ளைப் போவது உறுதி.

talakonawaterfalls

வெறும் 15 நிமிட வாக்கிங்

நீங்கள் பார்க்கிங்கில் உங்களது பைக் அல்லது காரை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து நடந்து செல்லலாம். பார்க்கிங் கட்டணமாக பைக்கிற்கு ரூ.20, காருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு நபரும் நுழைவுக்கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். பார்க்கிங்கில் இருந்து 15 நிமிடம் நடந்தால் போதும், நீங்கள் மெயின் நீர்வீழ்ச்சியை அடைந்து விடுவீர்கள். அதற்கு கீழேயே நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீர் நிரம்பிய ஒரு குளம் காணப்படுகிறது. அழகாக இருந்தாலும் ஆழமாக இருப்பதால் கவனத்துடன் குளிக்கவும்.

talakonawaterfalls

அனைவர்க்கும் ஏற்ற பாதுகாப்பான இடம்

இந்த நீர்வீழ்ச்சி பிரபல சுற்றுலாத் தலம் நன்கு நிர்வகிக்கப்படுகிறது. அதனால் இந்த இடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் என்றே சொல்லலாம். அதோடு அங்கே தனியார் மற்றும் TTD கெஸ்ட்ஹவுஸ்களும் உள்ளன, நீங்கள் ரெஸ்ட் எடுக்க அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னைக்கு பக்கத்தில இப்படியொரு அழகான நீர்வீழ்ச்சி இருக்கும் போது, இதை நீங்கள் மிஸ் பண்ணலாமா? பண்ணாதீங்க! இந்த வாரத்திலேயே ஒரு ட்ரிப் பிளான் பண்ணுங்க!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+