Search
  • Follow NativePlanet
Share
» »3 வருடப் பயணம், 135 நாடுகள் – கப்பலில் உலகம் சுற்றிப் பார்க்க நீங்க ரெடியா?

3 வருடப் பயணம், 135 நாடுகள் – கப்பலில் உலகம் சுற்றிப் பார்க்க நீங்க ரெடியா?

நம்மில் யாருக்குத் தான் சுற்றுலா செல்ல பிடிக்காது? எல்லோருக்குமே தான் இஷ்டம்! வேலைப்பளு, பட்ஜெட், விடுமுறை எல்லாம் பார்த்து நாம் சுற்றுலாவை திட்டமிடுகிறோம். ஆனால் இங்கே 3 வருடத்திற்கு ஒரு நீண்ட கப்பல் சுற்றுலா தொடங்கவிருக்கிறது. அதில் உலகின் 135 நாடுகளை நாம் சுற்றிப் பார்க்கலாமாம். ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை, மெக்சிகோவின் சிச்சென் இட்சா, இந்தியாவில் உள்ள தாஜ் மஹால், சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட பிரபலமான இடங்களுக்கு இந்த கப்பல் பயணிகளை மேலும் அழைத்துச் செல்லும். ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் மிரண்டு விடுவீர்கள்!

geminiicruisecover

3 வருட சுற்றுலாவில் 135 நாடுகள் சுற்றுப்பயணம்

மார்ச் 1 ஆம் தேதி, மிரே இன்டர்நேஷனல் க்ரூஸ் லைன் அதிகாரப்பூர்வமாக தங்கள் MV ஜெமினி கப்பலில் முதல் உலக பயணத்திற்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியது. புக்கிங் தொடங்கிய நாள் முதல் இது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம் இந்த 3 வருட சுற்றுலாவில் 135 நாடுகளில் உள்ள பிரதான சுற்றுலாத் தலங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். 1,30,000 மைல்கள் கடந்து 375 துறைமுகங்களில் நிறுத்தப்படும் இந்த சுற்றுலாவில் கலந்துக் கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

 world trip, Cruise journey

உலக அதிசயங்களை பார்த்து மகிழலாம்

உலகின் 13 அதிசயங்கள் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை அனுபவிக்கலாம். ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை, மெக்சிகோவின் சிச்சென் இட்சா, இந்தியாவில் உள்ள தாஜ் மஹால், சீனப் பெருஞ்சுவர், எகிப்தின் பிரமிடுகள் ஆகிய பிரபல சுற்றுலாத் தலங்களை நீங்கள் இந்த சுற்றுலாவில் கண்டு மகிழலாம். அது மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளின் உணவுகள், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றையும் நாம் இதில் தெரிந்துக் கொள்ளலாம்.

 world trip, Cruise journey

கப்பலில் தங்கியபடியே வேலை செய்யலாம்

தொலைதூர தொழிலாளர்கள் (work from home) எந்தவித சிரமுமின்றி எப்பொழுதும் போல வேலை செய்ய, கப்பல் ஒரு தனித்துவமான வணிக மையத்தை வழங்குகிறது. அதில் 14 அலுவலகங்கள், பல்வேறு சந்திப்பு அறைகள், ஒரு லவுஞ்ச் மற்றும் ஒரு வணிக நூலகம் உள்ளது. கரோக்கி, கோல்ஃப், யோகா உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் நீங்கள் கப்பலில் பயணிக்கும் போதே ஈடுபடலாம்.

 world trip, Cruise journey

சொகுசு வசதிகள் கொண்ட MV ஜெமினி கப்பல்

MV ஜெமினி 400 சொகுசு அறைகளில் 1,074 பயணிகள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Oceanview ஸ்டேட்ரூம்கள் விருந்தினர்களுக்கு அவர்களின் சொந்த பால்கனியை வழங்குகின்றன. கப்பலில் ஒரு ஆடிட்டோரியம், ஆரோக்கிய மையம் மற்றும் இலவச மருத்துவ வருகைகளை உள்ளடக்கிய 24 மணிநேர, ஆன்-கால் மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போர்டில் பல உணவகம் மற்றும் பார் சலுகைகள் உள்ளன. நீச்சல் குளம், ஆரோக்கிய மையம், உடற்பயிற்சி நிலையம், சலூன் மற்றும் சன் டெக் அதன் கூடுதல் அம்சங்களாகும்.

 world trip, Cruise journey

சுற்றுலா தொடங்கும் தேதி மற்றும் கட்டணம்

நவம்பர் 1, 2023 அன்று புறப்படும் லைஃப் அட் சீ க்ரூஸ் அதன் நீண்ட பயணத்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கி பார்சிலோனா, ஸ்பெயின் மற்றும் மியாமி, புளோரிடா வழியாக தொடரும். 2023 இல் தொடங்கும் சுற்றுலா 2026 இல் தான் முடிவடையும். இந்த பயணத்திற்கான பேக்கேஜ்கள் ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 24,51,300 முதல் ரூ. 89,88,320 வரை வசூலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொகுசு கப்பலில் பயணிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+