Search
  • Follow NativePlanet
Share
» »பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாடு செய்யும் முறை, எந்த திசையில் பொங்கல் வைப்பது?

பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாடு செய்யும் முறை, எந்த திசையில் பொங்கல் வைப்பது?

தைத்திருநாள், தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் என பல்வேறு பெயர்கள் கொண்ட பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு உற்சாகமான பண்டிகையாகும். பொங்கல் எப்படி வைப்பது, எந்த திசையில் வைப்பது, பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும், எந்த பூவை தொடுக்க வேண்டும், எந்த காய்கறிகளை வைத்து சமைப்பது என பலதரப்பட்ட கேள்விகள் நம் மனதுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் தானே. அனைத்துக்குமான விடைகள் இங்கே!

தமிழ் பண்டிகைகளில் தலையாய பண்டிகை

தமிழ் பண்டிகைகளில் தலையாய பண்டிகை

எத்தனை பண்டிகைகள் வந்தாலும் மிகவும் உற்சாகமாக, ஆரவாரமாக தமிழர்கள் கொண்டாடுவது இரண்டு பண்டிகைகளை மட்டுமே - ஒன்று பொங்கல் மற்றொன்று தீபாவளி. இந்த இரு பண்டிகைகளும் தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம் சிறிய வயதில் இருந்தே பல இன்பமான நினைவுகள் இந்த இரு பண்டிகைகளோடு நாம் தொடர்பு படுத்திக் கொள்வது வழக்கம் தானே! அதிலும் பொங்கல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சொந்த ஊர்களுக்கு பல மாதங்களுக்கு செல்லாதவர்கள் கூட பொங்கல் பண்டிகையைக் கொண்டு ஊருக்கு செல்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த நான்கு நாட்கள் பண்டிகையை மிகவும் உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம் அன்பர்களே!

நன்மைகளை பயக்கும் சூரிய பொங்கல்

நன்மைகளை பயக்கும் சூரிய பொங்கல்

போகி அன்றைக்கு நாம் வீட்டு தெய்வத்தை வழி பட வேண்டும். அதை முடித்தப் பிறகு தைத்திருநாளில் சூரிய பொங்கல் வைக்கக வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பாகுபாடு இன்றி கருணைக் காட்டும் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமான இந்த சூரிய பொங்கலை நாம் கொண்டாட வேண்டும். சூரியன் உதயமாகின்ற நேரத்தில் சரியாக இந்த பொங்கலை வைக்க வேண்டும். அதுதான் சூரிய பொங்கல், சூரியன் உதயமாகுவதற்கு முன் பொங்கல் வைப்பது கூடுதல் சிறப்பு.

வீட்டில் பொங்கல் வைக்கும் முறை

வீட்டில் பொங்கல் வைக்கும் முறை

நம் அனைவராலும் எழுந்து சூரியன் உதயமாகுவதற்கு முன்னர் பொங்கல் வைப்பது என்பது சற்று கடினமாக காரியம் அல்லவா. ஆகையால் நல்ல நேரத்தில் நாம் சூரியப் பொங்கல் வைக்கலாம். இந்த வருடம் பொங்கல் வைப்பதற்கு ஏராளமான நேரம் உள்ளது மக்களே, அதிகாலை 5.௦௦ மணி முதல் மதியம் 12.௦௦ மணி வரை நாம் பொங்கல் வைக்கலாம், இந்த ஏழு மணி நேரம் பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரமாகும். சுத்தம் செய்த பொங்கல் பானையை, கோலமிட்டு, அடுப்பில் வைத்து பொங்கல் பொங்க வேண்டும். கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழைமரம் மற்றும் என்னென்ன பொருட்கள் எல்லாம் நமக்கு உழவர்களால் கிடைக்கிறதே அனைத்தையும் வாங்கி வைத்து நாம் ஆதித்த பகவானுக்கு படையலிட வேண்டும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் வைக்க நல்ல நேரம்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வழக்கம், சிலர் ஒரு பொங்கல் செய்வார்கள். சிலர் இரண்டு வைப்பார்ககலள். சிலர் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு வருவார்கள். உங்கள் வழக்கம் எதுவோ, அது போல பொங்கலிட்டு வழிபடுங்கள். பால் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து இந்நாளில் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லிட வேண்டும். புத்தாடை அணிந்து பால், நெய், வெல்லம் இட்டு சர்க்கரை பொங்கலும், பால் இட்டு பால் பொங்கலும் செய்து, அனைத்து நாட்டுக் காய்கறிகளையும் வைத்து குழம்பு அல்லது கூட்டு வைத்து படையலிட வேண்டும். சூரிய பகவான் கிழக்கு திசையில் இருந்து உதிப்பதால் பொங்கலும் நாம் கிழக்கு நோக்கியே வைக்க வேண்டும்.

சூரிய பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம்: காலை 5.௦௦ மணி முதல் 6.௦௦ மணி வரை

வீட்டில் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம்: காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாட்டுப் பொங்கல் வழிபாடு

மாட்டுப் பொங்கல் வழிபாடு

மாட்டுப்பொங்கல் அன்று மாடு உள்ளவர்கள் வீட்டில் சொல்லவே வேண்டாம், மிகவும் விசேஷமாக இருக்கும். மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, படையிலிட்டு மாடுகளுக்கு நன்றி சொல்லுவார்கள். பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கிராம புறங்களில் சாயங்கால வேலையில் இந்த மாடுகள் யாவும் ஊர்வலம் வருவதைக் கூட காணலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் ஆகியவை நடைபெறுவதையும் நாம் கண்டு களிக்கலாம். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவது மிகவும் விசேஷமாகும். முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வைத்து வழிபடலாம். அவர்கள் எந்நாளும் உங்களுடன் இருந்து ஆசீர்வதிப்பார்கள்

வழிபடும் நேரம்: காலை 9 முதல் 1௦ மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழிபடலாம்.

காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கல் என்பது எல்லோரையும் கண்டு மகிழக்கூடிய பொங்கல் தான் காணும் பொங்கல். இந்த நாளில் நம் வீட்டு பெரியவர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். ஆசீர்வாதம் செய்வதோடு, பெரியவர்கள் சிறியவர்களுக்கு "பொங்கல் காசு" கொடுப்பது சந்தோஷப்படுவார்கள். பல நாட்களாக உங்கள் வீட்டு பெரியர்வகளை நீங்கள் காணாமல் இருந்திருந்தால் கூட இந்நாளில் அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறுங்கள். நம் எல்லோருடைய வீட்டிலும் பொங்கல் பொங்கி, இன்பம் பொங்கி, மகிழ்ச்சி பொங்க இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்! அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

More News

    Read more about: pongal tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+