• Follow NativePlanet
Share
» » நண்பர்களுடன் கேம்பிங் போக ஆசையா – அப்போ இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

நண்பர்களுடன் கேம்பிங் போக ஆசையா – அப்போ இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

மலை முகடுகளுக்கு நடுவிலோ, ஆற்றங்கரை அருகிலோ, பள்ளத்தாக்கிலோ, சமவெளியிலோ நண்பர்களுடன் சேர்ந்து கேம்பிங் அல்லது முகாமிடுவது என்பது நம் எல்லோரின் பக்கெட் லிஸ்டிலும் இருக்கும் ஒரு விஷயமாகும். இயற்கையின் மடியில் அமர்ந்தபடி, அதன் அழகை ரசித்துக் கொண்டே, கேம்ப்ஃபயர் செய்தபடி நண்பர்களுடன் கதைப் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். நினைத்து பாருங்களேன்! ஆனால் கேம்பிங் செய்வதற்கு சில ட்ரிக்ஸ் உள்ளன, அவற்றை எல்லாம் மறக்காமல் செய்ய விட்டால் கேம்பிங் சொதப்பிவிடும் பயணிகளே! அதே போல தமிழ்நாட்டின் இந்த இடங்களை உங்கள் கேம்பிங் ஸ்பாட்டாக செலக்ட் பண்ணுங்கள். நிச்சயம் சந்தோஷமடைவீர்கள்!

Camping tricks, Tamil Nadu

எந்த வகையான கேம்பிங் உங்களுக்கு பிடிக்கும்?

டென்ட் கேம்பிங்: பொதுவாக ஒரு முகாம் அல்லது தேசிய பூங்காவில் குளியலறை மற்றும் தண்ணீர் போன்ற வசதிகளைக் கொண்ட கூடாரத்தில் முகாமிடுவது.

கார் கேம்பிங்: ஒரு அழகான நீர்வீழ்ச்சி, ஒரு சுற்றுலாத் தலத்தில் காருக்குள்ளேயே முகாமிடுவது.

பேக்கன்ட்ரி கேம்பிங்: ட்ரெக்கிங் செய்து மலை முகடுகளுக்கு இடையே அல்லது பனி மலைகளுக்கு நடுவே அல்லது நீங்கள் தேடிச் சென்ற இலக்கில் முகாமிடுவது.

campinginchennai

சரியான இலக்கை முடிவு செய்தல்

நீங்கள் எந்த இடத்தில் கேம்பிங் செய்ய விரும்புகிறீர்களோ அது உங்களுக்கு பிரண்ட்லியாக இருப்பதை உறுதி செய்தல் அவசியம். நீங்கள் போகும் இடத்தில் ஏதேனும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றம் ஏதும் இல்லாத நேரத்தில் உங்கள் கேம்பிங்கை திட்டமிடுவது சாதுரியமானதாகும். சந்தோஷமாக இருக்க கேம்பிங் திட்டமிட்டுவிட்டு அங்கு போய் அப்செட் ஆகுவது நன்றாகவா இருக்கும்.

Camping tricks, Tamil Nadu

நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை

1. டென்ட் அமைப்பதற்கான கயிறுகள், கூடாரங்கள், கிளிப்கள்

2. டார்ச் லைட்டுகள், பேட்டரீஸ்

3. பிரட், ஜாம், சிப்ஸ், குளிர்பானம் போன்ற சமைக்காத உணவுப்பொருட்கள்

4. நூடுல்ஸ், முட்டை, காய்கறிகள் போன்ற எளிதில் சமைக்க கூடிய உணவுகள்

5. பேட்டரி ஸ்டவ்கள்

6. பவர் பேங்க்குகள்

7. தலையணை மற்றும் போர்வைகள்

8. கத்தி மற்றும் கத்தரிக்கோல்

9. ஸ்லீப்பிங் பேக்/ மேட்ஸ்

10. உலர்ந்த துணிகள் மற்றும் டவல்கள்

11. காலணிகள் மற்றும் ஷூக்கள்

12. பிளாஸ்டிக் பைகள்

13. பிரஷ், பேஸ்ட், சோப், டிஷு பேப்பர் மற்றும் மற்ற டாய்லெட்டரீஸ்

14. சன்ஸ்க்ரீன் லோஷன்கள், ஹேன்ட் வாஷ்கள்

15. எறும்பு ஸ்ப்ரே, பக் ஸ்ப்ரே

16. லைட்டர்ஸ் மற்றும் விறகுகள்

இவையெல்லாம் நீங்கள் ஒரு லிஸ்ட் போட்டு எடுத்துக் கொள்வது அவசியம், அதே போல டென்ட் செட் அப்பை நீங்கள் கிளம்புவதற்கு முன்னரே ஒரு முறை செய்து பார்ப்பது நல்லது.

Camping tricks, Tamil Nadu

தமிழ்நாட்டில் உள்ள பெஸ்ட் கேம்பிங் ஸ்பாட்ஸ்

1. கொடைக்கானல்

2. ஊட்டி

3. ஏற்காடு

4. ஏலகிரி

5. மகாபலிபுரம் கடற்கரை

6. முதுமலை

7. பன்றிமலை

8. ஆரோவில்

9. மஞ்சுமலை

10. மேகமலை

11. குன்னூர்

12. மாஞ்சோலை

13. ஏலகிரி

14. கோத்தகிரி

15. பொள்ளாச்சி

இந்த இடங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் கேம்பிங் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும். நீங்கள் இந்த இடங்களுக்கு சென்றால் நிச்சயம் இங்கு ஒரு முறை கேம்பிங் செய்ய மறக்காதீர்கள்!

More News

    Read more about: camping tricks tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+