Search
  • Follow NativePlanet
Share
» »சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அற்புத தேநீர் கடை!

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அற்புத தேநீர் கடை!

சிம்லா, ஷிம்லா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நகரம் பெயருக்கு ஏற்றார் போலவே மிக சிறப் பான தள ங்களை தன்னுள் கொண்டுள்ளது. நம்மில் பலருக்கு சிம்லா போக ஆசை இருக்கும். சிலர் சிம்லாவை நேரில் கண்டு மெய் சிலிர

By Udhaya

சிம்லா, ஷிம்லா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நகரம் பெயருக்கு ஏற்றார் போலவே மிக சிறப் பான தள ங்க ளை தன் னுள் கொண் டு ள்ளது. நம்மி ல் பல ருக்கு சிம்லா போக ஆசை இருக்கும். சிலர் சிம்லாவை நேரில் கண்டு மெய் சிலிர்த்திருப்பர். நம் வாழ் நாளில் ஒரு முறை யா வது சிம்லாவை நாம் தரிசித்து விட்டு வந்து விட வேண்டும். இந்தியாவின் சிறந்த இடங்களில் பத்தி ல் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். இந்த இடத்து க்கு பெரும் பாலும் தேனிலவு இணை கள், காதல் இணை கள், புதுமண இணைகள் செல்கிறார்கள். அதிலும் நாம் இ ந்த கட்டுரையில் காணவிருக்கும் இந்த கபே நிச்சயம் பலரு க்கு அறிமுகம் இல்லாத ஒன்றா கத் தான் இருக்கும். கைதிகளால் நடத்தப்படும் இந்த இடத்தைப் பற்றி விரிவாக காண் போம் தயா ராகுங்கள்.

 சிம்லாவின் அழகு

சிம்லாவின் அழகு


சிம்லா எனும் அழகியல் சொர்க்கம் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் சுற்றுலா பிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படக் கூடியது. சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் ஹனிமூன் எனப்படும் தேனிலவு சுற்றுலாவாக சிம்லாவில் சென்று கொண்டாடுகிறார்கள்.

சிம்லாவில் பல இடங்கள் இருக்கின்றன. அவை மிகவும் தனித்தன்மை யான தாகவும். சிறப்பு வாய்ந்த தாக வும் இருக்கின்றன என்பதோடு, அவற்றின் சிறப்புகளுள் ஒன்றுதான் இந்த தேநீர் கடை அல்லது புக் கபே எனும் பெயரிலான இந்த கடை.

 எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

வரலாற்று நினைவு சின்னங்கள் பலவும் நிறைந்த சிம்லாவில் இப்படி ஒரு கபே இருப்பது என்ன சிறப்பு என்று தோன்றலாம். இந்த கபே நடத்தப்படுவது சிறைக் கைதிகளால் என்றால் அது சிறப்புதானே..

இந்த கபே மீனா பஜார் எனும் பகுதியில் இது நடத்தப்பட்டு வருகிறது. ரிட்ஜூக்கு மேல் பகுதியில் தி மால் எனும் இடத்தில் இது இருக்கிறது.

கபே பற்றிய தகவல்கள்

கபே பற்றிய தகவல்கள்

இடம் - மீனா பஜார்

இந்த கபே இருக்கும் மீனா பஜார் எனும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகும். ஏனென்றால் இதன் அருகிலேயே பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அந்த சுற்றுலா தளங்களுக்கு வருகை தருபவர்களும் இந்த கபேவுக்கு வந்து செல்கின்றனர்.

கைதிகள்

வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் நான்கு பேர் சேர்ந்து இந்த கபேவை இயக்கி வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கைத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த கைதிகள் அம்மாநில அரசின் சுற்றுலாத் துறை உதவியுடன் இந்த கபேவை நடத்துகின்றனர்.

கபேவுக்கு இமாச்சல பிரதேச மாநில சுற்றுலா துறை நிதி உதவி செய்து வருகிறது. இந்த கபேயில் நொறுக்குத் தீனிகள், தேநீர், குளம்பி போன்றவை நல்ல பராமரிப்புடன் வழங்கப்படுகிறது.

காலை முதல் மாலை வரை

காலை முதல் மாலை வரை

கா லை 10 ம ணி க் கு இ ந் த க பே வை தி ற ப் ப து வ ழ க் க மா ம். சில நேரங்களில் முன்னதாகவே திறக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இரவு 9 மணி வரை செயல்படும் இந்த கபேவுக்கு நான்கு சிறைக் கைதிகள்தான் முதலாளி, தொழிலாளி உதவியாளர்கள் எல்லாம்.

இரவு 9 மணிக்கு கபே மூடியதும் சிறைக்கு திரும்பி செல்கின்றனர் இவர்கள்.

நன்கு கை தே ர் ந் த சமயல் க லை ஞ ர் க ள் மூலம் இவர்கள் இந்த தொழிலை க ற் று ள் ள ன ர்.

நீங்கள் ஏன் இங்கு செல்லவேண்டும்

நீங்கள் ஏன் இங்கு செல்லவேண்டும்


தங்கள் வாழ்க்கையை ஒரு பகுதி இருண்ட பக்கத்துக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பக்கங்கள் கிழிந்துவிடும் எனத் தெரிந்தும் இருக்கும் வரை அதில் கவிதைகள் எழுத முற்படும் இந்த நான்கு சிறைக் கைதிகள் நடத்தும் கபே எப்படி இருக்கிறது என்ற ஆவல் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கட்டாயம் இந்த கபேவுக்கு வருகை தரவேண்டும்.

பீட்சா வகைகளில் தொடங்கி, பிஸ்கட்டுகள் வரைக்கும் அனைத்தும் இங்கு கிடைக்கிறது. மேலும் உங்களுக்கு விருப்பமான பல உணவுகள் இங்கு கிடைக்கும்.

நீங்கள் புத்தகம் வாசிப்பவராக இருந்தால், உங்களுக்கு அடித்தது யோகம் என்றே கொள்ளலாம். ஏனென்றால் சுற்றுலா சென்ற இடத்தில் புத்தகம் படிப்பது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும், சில விடாப்பிடியான சுற்றுலாப் பிரியர்கள் புத்தகம் படிக்கவும் விரும்புவார்கள். அவர்களுக்காக புத்தகங்களும் இங்கு கிடைக்கின்றன. அட பெயரிலேயே அதுதானே இருக்கிறது. புக் கபே என்று. ...

எப்படி அடைவது

எப்படி அடைவது

விமானம் மூலமாக - சிம்லாவுக்கு நேரடியாக விமானங்கள் இந்தியாவின் பல நகரங்களிலிருந்து கிடைக்கின்றன. அங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் சிம்லாவை அடையலாம்.

விமான நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இந்த கபே அமைந்துள்ளது.

ரயில் மூலமாக - சிம்லா ரயில் நிலையம் அருகிலுள்ள பிற ரயில் நிலையங்களிலிருந்தும் நல்ல முறையில் இணைப்பு பெற்றுள்ளது. சிம்லா சுற்றியுள்ள நகரங்களிலிருந்து எளிமையாக வந்தடைய ரயில் வசதிகள் இருக்கின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிம்லாவை அடைய ரயில் விவரங்களை நம் பக்கத்தின் முகப்பில் இருக்கும் ரயில் விவரங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சாலை மூலமாக - சாலை வழியில் எளிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த சிம்லா நகரம் அருகிலுள்ள பல நகரங்களிலிருந்து செல்லும் வகையில் பல பேருந்து வசதிகளைக் கொண்டுள்ளது.

More News

    Read more about: india travel tourism shimla
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+