Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் டிக்கெட் புக் செய்வதில் சிக்கலா – இந்த முறையை பின்பற்றி டக்குனு புக் பண்ணிடுங்க!

ரயில் டிக்கெட் புக் செய்வதில் சிக்கலா – இந்த முறையை பின்பற்றி டக்குனு புக் பண்ணிடுங்க!

ரயில் டிக்கெட் புக் செய்து அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள சிரமம் தெரியும். முன்பதிவு செய்யப்படும் நேரத்தில் ஏற்படும் சிக்கல்களால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு பிடித்த இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியாமல் போய்கிறது. ஆனால் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் பிரிவான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) கட்டணத் திட்டம், இ - வாலட்டை பயன்படுத்தி (eWallet) சுலபமாக ரயில் டிக்கெட் புக் செய்திடலாம். முழு விளக்கமுறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

ரயில் டிக்கெட் புக் செய்வதில் ஏற்படும் சிக்கல்

ரயில் டிக்கெட் புக் செய்வதில் ஏற்படும் சிக்கல்

தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, ரயில் போக்குவரத்து ஒரு முக்கிய போக்குவரத்து முறையாக இருந்து வருகிறது. இன்றளவும் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் ரயில் போக்குவரத்தையே சார்ந்திருக்கின்றனர். ஒரு இடத்துக்கு இன்னொரு இடத்திற்குச் செல்ல லட்சக்கணக்கான மக்கள் இதை நம்பியிருக்கிறார்கள்.

அவர்கள் இலக்குக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் டிக்கெட் முன்பதிவு சமயத்தில் பல சிக்கல்கள் எழுகின்றன. பலமுறை இணையதளத்தில் ட்ராபிக் ஏற்படும், பேங்க் சர்வர் டவுன் ஆக இருந்தால் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். ஆனால் இ - வாலட் இருந்தால் சுலபமாக நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்திடலாம்.

IRCTC இ – வாலட் என்றால் என்ன?

IRCTC இ – வாலட் என்றால் என்ன?

இ-வாலட் என்பது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டண முறையாகும். அதாவது இது ஒரு பணப்பை ஆகும். அதில் உங்கள் பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்து, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பயணக் கட்டணத்தைச் செலுத்த பயன்படுத்தலாம். நீங்கள் அடிக்கடி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் அதைப் பயன்படுத்தலாம். உங்கள் பயனர் ஐடி மூலம், ஒரு மாதத்தில் 6 ரயில் டிக்கெட்டுகள் வரை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

IRCTC இ - வாலட் பதிவு செய்வதற்கான வழிகள்

IRCTC இ - வாலட் பதிவு செய்வதற்கான வழிகள்

ஸ்டெப் 1: IRCTC இணையதளத்திற்குச் சென்று உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும்.

ஸ்டெப் 2: 'IRCTC இ - வாலட்' மெனுவின் கீழ் 'இப்போதே பதிவு செய்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: பதிவு செய்ய உங்கள் ஆதார் அல்லது பான் எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.

ஸ்டெப் 4: KYC சரிபார்ப்புக்குப் பிறகு, 'IRCTC இ - வாலட் பதிவுக் கட்டணத்தைச் செலுத்துமாறு உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

ஸ்டெப் 5: பணம் செலுத்திய பிறகு, ஒரு வெற்றிகரமான பதிவு செய்தி பாப் அப் செய்து, நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.

IRCTC இ - வாலட்டில் பணத்தை எவ்வாறு டெபாசிட் செய்வது எப்படி

IRCTC இ - வாலட்டில் பணத்தை எவ்வாறு டெபாசிட் செய்வது எப்படி

ஸ்டெப் 1: உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும்.

ஸ்டெப் 2: 'IRCTC இ - வாலட்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: டெபாசிட் செய்ய வேண்டிய தொகையை உள்ளிடவும். IRCTC இன் படி, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.100, அதிகபட்சம் ரூ.10,000 ஆகும்.

ஸ்டெப் 4: பணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பணம் செலுத்துவதற்குச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். வெற்றிகரமான கட்டணத்திற்கான உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். அதனை க்ளிக் செய்யவும்.

இ வாலட்டில் உள்ள நன்மைகள்

இ வாலட்டில் உள்ள நன்மைகள்

பரிவர்த்தனைகள் தொந்தரவு இல்லாதவை மற்றும் பாதுகாப்பானவை. பணம் செலுத்தும் ஒப்புதல் சுழற்சி நீக்கப்படுவதால் உங்களுக்கு நேரம் சேமிப்பாகும். வழங்கப்பட்ட வங்கிகள் ஆஃப்லைனில் சென்றாலும் கூட நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும், கணக்குகளை ஆன்லைனில் நிர்வகிக்கலாம்.

கணக்கைப் புதுப்பிப்பதற்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது. IRCTC இ - வாலட் கணக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும், IRCTC இல் உள்ள 'டெபாசிட் வரலாற்றையும்' நீங்கள் சரிபார்க்கலாம், அங்கு அனைத்து வைப்புகளின் நிலையும் வழங்கப்படும்.

இப்போது, உங்கள் முன்பதிவுகளுக்கு IRCTC இ - வாலட் மூலம் பணம் செலுத்தலாம், மற்ற கட்டண முறைகளுடன் கிடைக்கும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், பணம் உங்களது இ வாலட்டில் வரவு வைக்கப்படும்.

தட்கலில் டிக்கெட் புக் செய்யும் போது, இவ்வாறு செய்து பாருங்கள். இனி எந்த தொந்தரவும் இல்லாமல் டிக்கெட் புக் செய்திடலாம்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+