Search
  • Follow NativePlanet
Share
» »பேருந்தில் குளித்துக் கொண்டே சுற்றுலா செல்லலாமா?

பேருந்தில் குளித்துக் கொண்டே சுற்றுலா செல்லலாமா?

படிச்சு முடிச்சுட்டு; வெளிநாடு போய் நல்லா சம்பாதிச்சுட்டு, 'சொகுசா' வாழ்க்கை வாழனும் டா...! என, சொல்லும் சொல்லை நம்மில் எவரும் ஒரு முறையாவது கேட்காமல் இருக்க முடியாது.

அந்தளவுக்கு, இன்றைய இளைய தலைமுறை 'லக்ஸரி' எனும் சொகுசு வாழக்கை வாழ, அதிக மெனக்கெடல் செய்கின்றனர். சரிங்க... அதுக்கு என்ன இப்போ; எல்லோருக்கும், ஏன் உங்களுக்கு கூட அப்படி ஒரு ஆசை இருக்கும்ல என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

'ராஜ, சொகுசு வாழ்க்கை'யை ஒரு முறையாவது நாம அனுபவிக்க மாட்டோமா என்று எல்லோருக்கும் ஆழ் மனதில் சின்னதா ஒரு ஆசை ஒளிந்து கிடக்கும்.

இன்றைய சூழலில் பெரும்பாலானோர், 'சொகுசு' வாழ்க்கையை அமைச்சுக்க தேவையான முயற்சியை செஞ்சுட்டு தான் இருக்காங்க. அதாவது, முன்பெல்லாம் நாம் சொந்த ஊருக்கோ அல்லது சுற்றுலா போகவோ பஸ், ரயில் என பொது போக்குவரத்தை தான் நாட வேண்டும். ஆனால், இன்று அப்படி இல்லை.

பத்தில் ஒருவர் வீட்டில் கார் இருந்தது போய், பத்தில் எட்டு பேர் வீட்டில் கார் இருக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. என்ன தான் பத்தில் எட்டு பேர் வீட்டில் கார் இருந்தாலும், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தால், நான்கு அல்லது ஐந்து பேர் வரை தான், அவர்கள் வைத்திருக்கும் காரில் சுற்றுலா செல்ல முடியும்.

taking a shower on the bus

அப்படியே எட்டு பேர் வரை போக கூடிய கார் வைத்திருந்தாலும், குட்டீஸ்களுடன் போகும் போது, இயற்கை உபாதையை கழிப்பது போன்ற பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வரும்.

அதற்கு எல்லாம் குட்பை சொல்லும் பேருந்துகள் வந்தாலும், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது குளித்து கொண்டே ஊர் சுற்றுனா எப்படி இருக்கும். அட அந்த வசதியும் வந்தாச்சுங்க. என்னது பஸ்சில் குளிச்சுட்டே ஊர் சுற்றலாம்?

ஹலோ குளிச்சுட்டே இல்ல, படம் பார்க்கலாம்; நமக்கு தேவையானதை சமைக்கலாம்; பிரிட்ஜ்ல சரக்கு வச்சு ஜில்லுனு அடிச்சுக்கிட்ட போலாம் நம்ம 'வொய்ப்'க்கு தெரியாம.. என்னது நம்ம வொய்ப் ஆ.

ஸாரிங்க கட்டுரையை சீக்கிரம் முடிச்சு அனுப்பனும்ல நீங்க படிப்பதற்கு. அதான் அவசரத்தில் வார்த்தை மாறிட்டு.

சரி சரி இன்ட்ரோவே இவ்வளவு பெரிசா கொடுத்தா நாங்க படிக்க மாட்டோம்... அதனால விஷயத்துக்கு வாங்க...!

கார்ப்ரேட் குரூப் கைய்ஸ் உங்க நட்பூஸ்களுடன் ஊர் சுற்ற அல்லது நாங்க எல்லாம் குடும்ப குத்து விளக்கு குடும்பத்துடன் தான் ஊர் சுற்ற விரும்புவோம் என, எப்படி நினைச்சாலும் சரி. இனி பஸ்சில் குளித்து கொண்டே மட்டுமில்லை; சமைக்கும் வசதியுடன் ஊர் சுற்றலாம்.

அப்படி ஒரு தனித்துவமான இல்ல இல்ல அனைத்து விதமான 'லக்ஸரி'இருக்கும் பஸ்சை, நீங்க வெளியூருக்கு செல்லும் போது உங்களுடன் எடுத்து செல்லலாம். மறக்காதீங்க... அந்த பஸ்சில் 7 பேர் கொண்ட குடும்பம் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

முன்னணி தனியார் பஸ் நிறுவனமான 'ப்ர்வீன் டிராவல்ஸ்' சொகுசு கேரவன் பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தனித்துவமான பஸ், நகரத்திலேயே முதன்முதலாக, அனைவரின் பயண அனுபவத்தை இணையற்ற சௌகரியத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

taking a shower on the bus 2

சொகுசு பஸ்சில் என்னென்ன வசதிகள்

Ø ஏழு பேர் வரை வசதியாக தங்கலாம்

Ø இரண்டு படுக்கையறையை உள்ளடக்கியது

Ø பொதுவான குளியல் மற்றும் கழிப்பறை

Ø உங்கள் சமையல் தேவைகளுக்கு உரிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Ø பொழுது போக்கு என, ஸ்மார்ட் டிவி

Ø USB மற்றும் மொபைல் சார்ஜர் போர்ட்கள் மற்றும் ஆன்போர்டு வைஃபை

Ø கேரவனுக்குள் எளிதாக தொடர்பு கொள்ள இண்டர்காம் வசதி

Ø ஓய்வுக்காக வெளிப்புற நாற்காலிகளுடன் கூடிய வசதி

Ø தூய்மையைப் பேணுவதற்கும், எந்தத் தேவைகளுக்கும் உதவுவதற்கும் ஒரு பிரத்யேக உதவியாளர்.

Ø அது மட்டுமில்லை பஸ்சில் குளிர்சாதனப் பெட்டி இருக்கு. அது உங்கள் சிற்றுண்டிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும். அது என்னங்க சிற்றுண்டி என்று ஆபாசமான வார்த்தை பயன்படுத்துறீங்க... சரக்கை ஜில்லுனு வச்சுக்கலாம் என டீசன்ட்டா சொல்லுங்க...!

taking a shower on the bus 3

முன்பதிவு, கட்டணம் உள்ளிட்ட கூடுதல் தகவலுக்கு, அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்.

Raja Mohammed: 8754298999 ([email protected])

Jaikumar: 9840774851 ([email protected])

Thomas: 9840962285 ([email protected])

Joe: 9790844678 ([email protected])

அது எல்லாம் சரி, பஸ்சை பார்க்கவே பிரமாண்டமாக இருக்கு. அதற்கு ஏற்றார் போல தான் பஸ்சுக்கான கட்டணமும் இருக்கும் என நினைக்கிறீங்க தானே.. ஹலோ ஏழு பேர் சேர்ந்து ஒரு இடத்துக்கு போகும் போது ஷேரிங் முறையில் செலவு என்கிற போது, ஒருவருக்கான கட்டணம் என்பது குறைவாக தான் வரும் என்பதை மறக்காதீங்க...

Can we go on a tour while taking a shower on the bus

இந்த கட்டுரை யாருக்கும் விளம்பரம் கொடுக்கறதா நினைக்காதீங்க.. நீங்க தேர்வு செய்யுற ஸ்பாட்டில் டிரஸ் மாத்துற வசதி இல்லையே என நினைக்க வேண்டிய தேவை இருக்காது இந்த லக்ஸரி கேரவனை, குடும்பத்துடன் ஊர் சுற்ற ஒரு முறை புக் பண்ணிட்டு போகும் போது...! அதற்கு தான் இந்த விஷயத்தை உங்களுக்கு சொன்னேன்.

என்னங்க நீங்க உங்களுக்கு இந்த கட்டுரையை வாசிக்க கொடுக்க நினைச்சு முடிச்சுட்டு எழுந்து போகலாம்னுனா... எங்க வீட்டில் விடல இந்த கேரவனை உடனே புக் பண்ணுங்க நாம இப்ப ஊர் சுற்ற போலாம் என்று சொல்லிட்டாங்க... இந்த மாசம் என் பர்ஸ் எப்படியும் பழுத்துடும் போங்க....

ஓகே மெட்ராசை சுத்தி பார்க்க போறேன்... மெரினாவில் வீடு கட்ட போறேன். ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ... டுன்டுன் நானா நானா...!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+