Search
  • Follow NativePlanet
Share
» »ரூ.60 கட்டணத்தில் சென்னையில் படகு சவாரி?

ரூ.60 கட்டணத்தில் சென்னையில் படகு சவாரி?

சென்னை போன்ற பெரு நகரங்களில், கொண்டாட்டங்களுக்கு என, ஒரு விலையை இளம் தலைமுறையினர் கொடுத்தாக வேண்டும். பர்ஸ் வெயிட்டா இருந்தால் மட்டுமே, பெருநகரங்களில் 'என்ஜாய்' பண்ண முடியும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், அப்படி இல்லைங்க...! குறைந்த காசிலும் அசால்ட் பண்ணலாம் என்ற கருத்தும் மேலோங்குகிறது.

எது எப்படியோ, எந்தவொரு சந்தோஷமும், துக்கமாக மாறாதவரை, அதன் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அட என்னங்க. ஏதோ, ஏதோ பேசுகிறீங்க. விஷயத்துக்கு வாங்க பாஸ். சென்னையில் இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு, படகு சவாரி போகனும் என்றால் சேத்துபட் ஏரி தான் நினைவுக்கும் வரும்.

புறநகர் என்றால் மகாபலிபுரம் அருகே உள்ள முட்டுக்காடு படகு குழாம். இங்கு எல்லாம் போகனும் என்றால் கொஞ்சம் செலவு ஆகும். அதுவும் படகு சவாரிக்கு. ஆனால், நாங்க சொல்ல போவது; 60 ரூபாயில் அழகான ஒரு படகு சவாரி போலாம் என்பது தான். என்னது 60 ரூபாயிலா? ஹலோ முதலில் அதை சொல்லுங்க... வீட்டில் இருக்கும் எங்க குட்டீஸ்கள் எல்லாம் ஒரு வழி பண்ணுதுங்க.

boatrideforsixtyrupeesinchennai1

எந்த இடம்

சென்னை ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி, பொதுப் பணித்துறை வசம் உள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு 22 ஹெக்டேர்; கொள்ளளவு 21.50 மில்லியன் கன அடி; ஏரியின் கரையின் நீளம் 2,100 மீட்டர்; ஆழம் 12¼ அடி ஆகும்.

ஏரியின் சுற்றுச்சூழலை 28.16 கோடி ரூபாய் செலவில், தமிழக மீட்டெடுத்து பசுமை பூங்காவை அமைத்துள்ளது. சுற்றுச்சுவர், கைப்பிடி வசதிகளுடன் கூடிய நடைபாதை, பறவைகள் தங்கிச் செல்வதற்கான இரு தீவுகள், சிறுவர் விளையாட்டுத் திடல், மின் விளக்குகள் மற்றும் படகுக் குழாம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஏரியின் அழகையும், அங்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகளையும் படகில் சவாரி சென்றவாறே ரசிக்கலாம். அதுவும் குறைந்த கட்டணத்தில்.

boatrideforsixtyrupeesinchennai

எப்படி போவது

சென்னை மாநகரில் எந்த பகுதிகளிலும் இருந்து ஆவடி செல்ல பஸ் வசதிகள் உள்ளன. அதே போல மின்சார ரயில்களில் ஆவடி வரை சென்று, அங்கிருந்தும் ஆட்டோ, பஸ்கள் வாயிலாக செல்ல முடியும்.

ஆவடி மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பசுமை பூங்காவில், காலை, மாலை வேளைகளில் பொது மக்கள் நடைபயிற்சி மற்றும் யோகா, சிலம்பாட்டப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டணம் எவ்வளவு

நீச்சல் தெரிந்த மீனவரின் வழிகாட்டல், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி செய்ய, பெரியவர்களுக்கு ரூ.60ம், சிறியவர்களுக்கு ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

ஒன் டே ட்ரிப் போகலாம் என, நீங்கள் நினைத்து இருந்தால் உடனே கிளம்புங்க உங்கள் குட்டீஸ்களுடன் ஒரு ரைடு போயிட்டு வர...!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+