Search
  • Follow NativePlanet
Share
» »இந்த வாரம் சென்னையிலிருந்து சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லலாமா?

இந்த வாரம் சென்னையிலிருந்து சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லலாமா?

இந்த வார இறுதியில் சென்னையிலிருந்து 2 மணி தூர பயணத்தில இருக்கிற இந்த இடத்துக்கு போய் ஒரு அழகான, ஜில்லென்ற நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட நீங்க ரெடியா? ஆமாங்க, சென்னைக்கு பக்கத்தில இருக்கிற சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு உங்க பைக்கை எடுத்துகிட்டு ஜாலியா ஒரு ரைடு சென்று, கொஞ்ச நேரம் ட்ரெக்கிங் செய்து, ஓடை நீரிலும், ஜில்லுன்னு இருக்கிற நீர்வீழ்ச்சியிலையும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு வர சூப்பர் ஐடியா நாங்கள் தருகிறோம்!

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அழகான நீர்வீழ்ச்சிகள்

வெப்பமண்டல கடற்கரை சுற்றுலாத் தலமாக விளங்கும் சென்னைக்கு அருகில் நீர்வீழ்ச்சிகளா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், உண்மையில் இருக்கின்றன. இயற்கைக்காட்சி, இனிமையான சூழல், பொங்கி வழியும் நீர் மற்றும் வசீகரிக்கும் நிலப்பரப்பு என நம்மை வியக்க வைக்கிறது சென்னைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இந்த இடங்கள் தான் சரியான சாய்ஸ்!

கொளுத்தும் வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஒரு டிரிப்

புரட்டாசி மாதம் தான், ஆனால் வெயில் என்னவோ சித்திரை போல கொளுத்துகிறது! அடிக்கிற வெயிலுக்கு இதமா ஒரு பைக் ரைடு சென்று, ஜில்லுன்னு மேலே இருந்து விழுற அருவியில ஆனந்தமா நீந்தி குளிச்சு, ஓய்வெடுத்துட்டு வந்தா எப்படி இருக்கும்? படிக்கவே ஆசையாக இருக்கிறது அல்லவா! செய்து பார்த்திடலாம் வாருங்கள்! சென்னையில் இருந்து பைக்கில் சித்தேஸ்வர கோணா நீர்வீழ்ச்சிக்கு எப்படி செல்வது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? சுற்றிப் பார்க்க என்னவெல்லாம் இருக்கிறது என்பது கேள்விகளுக்கு விடை காண கீழே படியுங்கள்!

siddeswaraswamykonawaterfalls

சென்னை to சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சி

சென்னைக்கு பக்கத்தில இருக்கிற நீர்வீழ்ச்சி என்றால் எல்லோரும் தடா, மூல கோணா, சதாசிவ கோணா, நாகலாபுரம் மட்டுமே சொல்லுவார்கள். ஆனால், உங்க யாருக்கும் தெரியாத ஒரு அழகான நீர்வீழ்ச்சியான சித்தேஸ்வர சுவாமி கோணா சென்னையிலிருந்து 180 கிமீ தூரத்தில் தான் அமைந்துள்ளது. உங்க பைக்கை எடுத்துகிட்டு வெறும் ரூ.1000 க்கு பெட்ரோல் போட்டுட்டு கிளம்புனீங்கன்னா போதும், இந்த அழகான இடத்துக்கு இந்த வார இறுதியில் போயிட்டு வந்துடலாம் தெரியுமா.

எப்படி செல்வது என்று இங்கே பாருங்கள்

நீங்கள் உங்கள் மொபைல் போனில் Sri Siddeswara swamy kona waterfalls, Rapuru (ஸ்ரீ சித்தேஸ்வர கோணா நீர்வீழ்ச்சி, ரேப்புரு) என டைப் செய்தால் போதும். அந்த இடத்திற்கு சரியான பாதையை இது காண்பித்து விடும். இந்த வழியை பின்தொடர்ந்து சென்றால் வெறும் 2 மணி நேரத்தில் அடைந்து விடலாம். அந்த இடத்தில் உள்ள சாலையில் ஓரமாக உங்கள் பைக்கை பார்க் செய்து விட்டு இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.

siddeswaraswamykonawaterfalls

இயற்கை அழகு நிறைந்த பாதை

நீர்வீழ்ச்சியை அடைய நீங்கள் ஒரு 30-45 நிமிட நடைபயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். செல்லும் வழியெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலையும், அழகிய சிறு சிறு ஓடைகளையும் நீங்கள் காண்பீர்கள். ஆனால், அதன் அழகில் தொலைய வேண்டாம், நம்முடைய இலக்கு நீர்வீழ்ச்சி தான். எனவே கவனம் சிதறாமல் ஓடைகளை கடந்து நீர்வீழ்ச்சியை அடைய நடந்து செல்லுங்கள்.

தெளிவான நீர், மனதை மயக்கும் இயற்கை சூழல்

உங்களுடைய தூரமும், பயணமும் நீர்வீழ்ச்சியை கண்டவுடன் காணாமல் போகும் அளவுக்கு தெளிவான நீரும், இயற்கை அழகும் நிறைந்த சூழலும் நம் மனதை மயக்குகிறது. உங்களது பைகளை ஓரமாக வைத்துவிட்டு குளத்திலும் நீர்வீழ்ச்சிக்கு அடியிலும் நின்று ஆனந்தமாக குளியுங்கள். நீச்சல் தெரிந்தவர்கள் அதிக தூரம் செல்லலாம், ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் உங்களுக்கு உயரத்திற்கு ஏற்றார்போல் இறங்கி குளிக்கவும்.

siddeswaraswamykonawaterfalls trip from Chennai

நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. செருப்புகளை அணியுங்கள், ஷூ ஈரமாகி வழுக்கி விழுவதற்கு வழிவகுக்கும்.

2. ஜிப் வைத்த மூடிய பையை எடுத்துச் செல்லுங்கள். குரங்குகள் உங்கள் அருகில் வந்து திறந்த பை அல்லது கையில் எதையும் எடுத்துச் செல்லும்.

3. உங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். அங்கு எதுவும் கிடைக்காது.

4. சிரம நிலை நடுத்தரமானது என்பதால் வயதானவர்களும் கண்டிப்பாக வரலாம்.

5. பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் - பிப்ரவரி வரை மட்டுமே. மற்ற காலங்களிலும் நீர்வரத்து இருக்கும், ஆனால் அக்டோபர் - பிப்ரவரி அதிகமான நீர்வரத்து இருக்கும்.

என்ன மக்களே இந்த வார இறுதியில் இந்த இடத்திற்கு செல்லலாமா?

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+