Search
  • Follow NativePlanet
Share
» » தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்கின்றனவா!

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்கின்றனவா!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கு 'தட்கல்' மற்றும் 'பிரீமியம் தட்கல்' ஒதுக்கீட்டை வழங்குகிறது. தட்கல் டிக்கெட் பற்றி நமக்கு தெரியும், நாம் பலமுறை முன்பதிவு செய்திருப்போம். ஆனால் இந்த பிரீமியம் தட்கல் டிக்கெட் என்றால் என்ன? அதனுடைய ஸ்பெஷாலிட்டி என்ன என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

தட்கல் டிக்கெட் என்றால் என்ன?

தட்கல் டிக்கெட்டுகள் இந்திய ரயில்வேயால் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, தட்கல் என்றால் 'உடனடி' என்று அர்த்தம். பயணத்தின் உண்மையான தேதிக்கு ஒரு நாள் முன்னதாக ஒரு பயணி டிக்கெட்டை முன்பதிவு செய்ய இது உதவுகிறது. கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்டுகளைப் பார்க்கும்போது முன்பதிவு செய்யக்கூடிய டிக்கெட்டுகள்தான் தட்கல் டிக்கெட்டுகள். சரி, நீங்கள் கேள்விப்படாத பிரீமியம் தட்கல் என்ற மற்றொரு விருப்பம் உள்ளது.

1

பிரீமியம் தட்கல் டிக்கெட் என்றால் என்ன?

பிரீமியம் தட்கல் முன்பதிவு 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மாறும் விலையில் வேலை செய்கிறது. அதாவது, தேவை அதிகரித்தால் (விசேஷ நாட்கள்) பயணிகளிடம் அதிக கட்டணமும், தேவை குறைவாக இருந்தால் (சாதரண நாட்கள்) குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதாவது பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் வகுப்புகளுக்கான டைனமிக் கட்டண விலையுடன் வருகின்றன என்பது இதன் அர்த்தமாகும்.

தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் இடையே உள்ள வித்தியாசம்

1. தட்கல் டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, இரண்டாம் வகுப்புக்கான அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதமும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கான அடிப்படைக் கட்டணத்தில் 30 சதவீதமும் அதிகபட்சமாக தட்கலில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளில் பல்வேறு வகுப்புகளுக்கான டைனமிக் கட்டண விலை உள்ளது, அதாவது மாறிக்கொண்டே இருக்கும்.

2. தட்கல் டிக்கெட்டுகளை முகவர் உதவியுடன் பதிவு செய்யலாம். அதேசமயம், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கு இந்த விருப்பம் இல்லை. பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

3. RAC/WL டிக்கெட்டை தட்கல் டிக்கெட்டுகளாக முன்பதிவு செய்யலாம், அதேசமயம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே பிரீமியம் தட்கலின் கீழ் பதிவு செய்யப்படும்.

4. தட்கல் முன்பதிவின் கீழ் பயணிகள் காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட்டைப் பெறலாம் ஆனால் பிரீமியம் தட்கலுக்கு இது சாத்தியமில்லை.

5. தட்கல் டிக்கெட்டை ரத்து செய்யலாம். பிரீமியம் தட்கலுக்கு இந்த விருப்பம் இல்லை.

6. தட்கல் டிக்கெட்டுகளின் கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பிரீமியம் தட்கல் சேவையின் கீழ், எந்தவொரு பயணிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை.

7. தட்கல் டிக்கெட்டுகள் கவுண்டர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் ஆன்லைன் தளங்களில் மட்டுமே கிடைக்கும்.

8. தட்கல் முன்பதிவு காலம் (ARP) மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு ஒரே மாதிரியாக இருக்கும். பயணத் தேதியைத் தவிர்த்து, பயணத்தின் உண்மையான தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+