Search
  • Follow NativePlanet
Share
» »எம்மாடியோவ்.... இந்த நாடுகளில் விசா கட்டணம் அதிகம்?

எம்மாடியோவ்.... இந்த நாடுகளில் விசா கட்டணம் அதிகம்?

வில்லியம் ரஸ்ஸல் என்ற காப்பீட்டு நிறுவனம், உலகளவில் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது மிகவும் எளிதானது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டது. வெளிநாட்டவர்களின் மக்கள் தொகை, விசா தரவு, சுகாதார சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், விசா தேவைப்படும் நாடுகளை பற்றிய சில சுவாரஸ்யமான, அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிப்பட்டன.

அதாவது, வெளிநாட்டினருக்கு மிகப்பெரிய தடையாக விசா கட்டணம் இருந்தது. உலகில் மிகக் குறைவான வெளிநாட்டினரைக் கொண்ட நாடு இந்தியா (0.4 சதவீதம்). லக்சம்பர்க் நாட்டில் வசிக்க விரும்பும் எவருக்கும் அதிக சம்பள வரம்பு உள்ளது (£72,580). உலகளவில் அதிக விசா கட்டணங்களை கொண்ட நாடுகள் பற்றி விபரங்களை பார்ப்போம்?

most expensive visa fees in the world

Ø கிரீஸ்

விசா பெயர்: EU ப்ளூ கார்டு

விலை: €300 (£257)

Ø போர்ச்சுகல்

விசா பெயர்: EU ப்ளூ கார்டு

விலை: €375 (£321)

Ø நெதர்லாந்து

விசா பெயர்: EU ப்ளூ கார்டு

விலை: €380 (£325)

Ø பின்லாந்து

விசா பெயர்: EU ப்ளூ கார்டு

விலை: €380 (£325)

Ø ஸ்பெயின்

விசா பெயர்: EU நீல அட்டை

விலை: €418 (£358)

Ø இந்தியா

விசா பெயர்: வேலைவாய்ப்பு விசா

விலை: ₹45,174 (£427)

Ø ஜப்பான்

விசா பெயர்: உயர் திறமையான தொழிலாளர் விசா

விலை: ¥150,000 (£796)

Ø யு.கே

விசா பெயர்: திறமையான தொழிலாளர் விசா

விலை: £1,343

Ø அமெரிக்கா

விசா பெயர்: H-1B விசா

விலை: $1,717 (£1,351)

expensivevisa1

Ø ஆஸ்திரேலியா

விசா பெயர்: தற்காலிக திறன் பற்றாக்குறை விசா (சப்கிளாஸ் 482)

விலை: AU$3,035 (£1,570)

கொரோனா பொது முடக்கத்தின்போது, சுற்றுலாவை மட்டும் நம்பியிருக்கும் பெரும்பாலான நாடுகள் பெரும் பொருளாதார பின்னடவைச் சந்தித்தது. தற்போது மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

சுற்றுலா பயணியர்களை எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்கும் முயற்சியில், உலக நாடுகள் போட்டிப்போட்டு சுற்றுலா பயணிகளுக்கு என பல சலுகைகளை அறிவித்து வருகிறது. எப்படி இருப்பினும், இந்த கோடை விடுமுறைக்கு மக்கள் கூட்டத்தால், பல சுற்றுலா தலங்கள் திணறப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

புதிய நாட்டுக்கு செல்வது, பிற கலாசாரங்களை பற்றிக் கற்றுக்கொள்வது, வெவ்வேறு நாட்டு உணவுகளை ருசிப்பது, புதிய சமூகங்களில் மூழ்குவது போன்றவை உண்மையில் மற்ற அனுபவங்களை போலல்லாது என்பதை ஊர் சுற்றுபவர்கள் தான் உணருவர்.

எது எப்படியோ குறைந்த செலவில் நல்ல அனுபவம் தரும் சுற்றுப்பயணத்தை தான் நடுத்தர மக்கள் விரும்புபவர். அவர்களின் தேர்வாக மேற்குறிப்பிட்ட நாடுகள் இடம்பெறுவது எப்போதோ...!

More News

    Read more about: highest visa fees
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+