Search
  • Follow NativePlanet
Share
» »தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது எவ்வளவு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?

தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது எவ்வளவு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?

ஏதோ ஒரு அவசர வேலையா? கடைசி நிமிட பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? ஆனால் நீங்கள் எந்த ரயில் டிக்கெட்டையும் முன்கூட்டியே பதிவு செய்யவில்லையா? கவலைப்பட வேண்டாம், ஏனெனில் IRCTC தனது தட்கல் திட்டத்தின் மூலம் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய பயணிகளை அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், உடனடி பயணத் திட்டங்களுக்கு நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால், தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது, நீங்கள் சில கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்! அது எவ்வளவு? தட்கல் டிக்கெட்டை எவரு எளிதாக புக் செய்வது என்று இங்கே பார்ப்போம்!

பயணிகளின் வசதிக்காக தட்கல் டிக்கெட்

இந்திய ரயில்வே அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட வகுப்புகளிலும் கிட்டத்தட்ட அனைத்து ரயில்களுக்கும் தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஸ்லீப்பர், 3ஏசி, 2ஏசி அல்லது 1ஏசி என எதுவாக இருந்தாலும் கடைசி நிமிடத்தில் டிக்கெட் பெறலாம். இருப்பினும், தட்கல் முன்பதிவின் கீழ் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே இருப்பதால், உங்களுக்கு இடங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஆதலால் கவனத்துடன் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

payextrafortatkalticket

தட்கல் முன்பதிவு செய்வதற்கான நேரம்

ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் (24 மணி நேரம்) முன்பு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த ஒதுக்கீட்டிற்கான முன்பதிவு சாளரம் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை (2 மணிநேரம்) புக் செய்யலாம். ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு - காலை 10 முதல் 11 மணி வரை தினமும் புக் செய்யலாம். 2ம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு - காலை 11 முதல் 12 மணி வரை தினமும் புக் செய்யலாம்.

டிக்கெட் கட்டணத்தின் குறைந்தபட்ச கூடுதல் கட்டணம்

· 2வது வகுப்பு - 10 ரூபாய்

· ஸ்லீப்பர் கிளாஸ் கோச் - 100 ரூபாய்

· ஏசி நாற்காலி கார் - 125 ரூபாய்

· 3வது வகுப்பு கோச் - 300 ரூபாய்

· 2வது ஏசி கிளாஸ் கோச் - 400 ரூபாய்

· 1வது ஏசி கிளாஸ் கோச் / எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் - 400 ரூபாய்

டிக்கெட் கட்டணத்தின் அதிகபட்ச கூடுதல் கட்டணம்

· 2வது வகுப்பு - 15 ரூபாய்

· ஸ்லீப்பர் வகுப்பு - 200 ரூபாய்

· ஏசி நாற்காலி கார் கோச் - 225 ரூபாய்

· ஏசி 3வது ஏசி கோச் - 400 ரூபாய்

· ஏசி 2வது ஏசி கோச் - 500 ரூபாய்

· ஏசி 1வது ஏசி கோச்/எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் - 500 ரூபாய்

ஆன்லைனில் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி

· IRCTC செயலியில் இருந்து தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் IRCTC செயலியை நிறுவவும்.

· பயன்பாட்டைத் திறந்து உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும்.

· இப்போது "தட்கல் முன்பதிவு" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

· ரயில் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.

· பயணிகளின் விவரங்களை நிரப்பவும்.

· உங்களுக்கு விருப்பமான இருக்கை வகுப்பு மற்றும் பெர்த் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

· கட்டணத்தை மதிப்பாய்வு செய்யவும்

· கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்துங்கள். கட்டண நிலையைச் சரிபார்த்து, அது உறுதிசெய்யப்பட்டவுடன் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கவும்.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+