Search
  • Follow NativePlanet
Share
» »ஹாய் குட்டீஸ்... இந்த கோடைக்கு மீன் பிடிச்சு விளையாடலாம்?

ஹாய் குட்டீஸ்... இந்த கோடைக்கு மீன் பிடிச்சு விளையாடலாம்?

இயற்கை அழகு, பாரம்பரியம், பல்வேறு கலாசாரங்களின் நிலம் என்றழைக்கப்படும் பகுதி கேரள மாநிலம். இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் முழுவதும் உள்ள மாநிலம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு பச்சை பசேல் என்று இருக்கும் இந்த மாநிலத்தில், சுற்றுலா செல்லும் இடங்கள் கொட்டிக்கிடக்கிறது.

அந்த வரிசையில், இந்த கோடைக்கு கேரள மாநிலம் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், மறக்காம திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய இடமான 'மரைன் வேர்ல்டு அக்வோரியம்' செல்லுங்கள் குட்டீஸ் உடன். இப்ப எல்லாம் ஊருக்கு ஊர் செயற்கையாகவே,'அக்வோரியம்' ஏற்படுத்தி வச்சுருக்காங்களே. அப்புறம் என்ன இந்த ஊருக்கு போகனும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய 'அக்வோரியம்'என்ற கூடுதல் சிறப்பம்சத்தை, மரைன் வேர்ல்டு பெற்றிருக்கிறது. அப்படி என்ன கூடுதல் சிறப்பு அம்சம் என்று கேட்கிறீர்களா?... திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டில், இந்த அக்வோரியத்தில் குட்டீஸ்களுக்கு கடல் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள், அதன் வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்களை 'கிரிஸ்டல் க்ளீயர்' வாட்டரில் தன் அழகிய துடுப்புகளை நீட்டி நீந்தி செல்லும் நிச்சயம் அழகை காணலாம்.

Do You Know India s Largest Public Aquarium

கம்பீரமான கடலுக்கு அடியில், பலவகையான கடல்வாழ் உயிரினங்களை, அவற்றின் இயற்கையான அழகை குறைந்த கட்டணத்தில் ரசிக்கும் வாய்ப்பை நிச்சயமாக பெறலாம்.

ஆச்சரியம், அதிசயங்கள் நிறைந்து காணப்படும் மரைன் வேர்ல்டுக்குச் சென்று, அங்கிருக்கும் நீருக்கடியில் சுரங்கப்பாதையில் உலாவும், பலவகையான பறவைகளுடன் விளையாடவும், உங்கள் குழந்தைகளை, குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் பயமின்றி விட்டு சென்று, நீங்களும் உங்கள் துணையுடன் என்ஜாய் பண்ணலாம்.

வாட்டர் பிட்ஜ் எனப்படும் நீர் பாலத்தில் நடப்பதோடு, நீருக்கடியில் சென்று உங்களுக்குப் பிடித்த நீர்வாழ் உயிரினங்களை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். நீங்கள் ஒரு பயணியாக இருந்தாலும், உள்ளூரை பூர்வீகமாக இருந்தாலும் அல்லது கடல்வாழ் உயிரினங்களில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும், அக்வா வேர்ல்ட் நிச்சயமாக உங்களுக்கான இடம்.

என்னென்ன சிறப்பம்சங்கள்

கார் அக்வோரியம்

சிலிண்டர் அக்வோரியம்

கண்ணாடி பாலம்

மீன்களுக்கு உணவளிக்கும் பகுதி

அன்டர் வாட்டர் டனல்

ப்யூட்டி ஆஃப் ஓசன்

ட்ச் பூல்

ஆர்டிபிசியல் ரெயின் பாரஸ்ட்

ஆர்டிபிசியல் மாங்குரோவ் பாரஸ்ட்

பிஸ் பெடிக்யூர்/ பிஸ் தெரபி

16 டி சினிமா

லைவ் பிஸ் கேட்சிங்

பறவைகள் பூங்கா

குழந்தைகள் பூங்கா

Do You Know India s Largest Public Aquarium1

பயணத்தை நினைவுக்கூறும் வகையில் பொருட்களை வாங்க வசதியாக ஷாப்பிங் பகுதி

என, குறைந்த கட்டணத்தில் என்ஜாய்க்கு பஞ்சமில்லாத பகுதி, மரைன் வேர்ல்டு என்பதை, நீங்கள் ஒரு முறை விசிட் அடித்துவிட்டு சொல்லுங்கள்.

கட்டணம் எவ்வளவு?

பொது (10 - 60 years) - ₹ 400.00

வயதானவர்கள் (60 + years) - ₹ 350.00

குழந்தைகள் (95cm உயரம் அதிகமுள்ள) - ₹ 280.00

முகவரி மற்றும் தொடர்பு எண்:

Marine World, Panchavadi Beach,

Edakkazhiyur P.O. Chavakkad,

Thrissur (Dist), Kerala, PIN: 680515

+91 487 261 7000

+91 8589980546

[email protected]

அதிகாரப்பூர் இணையதள முகவரி:

https://marineworld.in/

இந்த பகுதி, நீங்கள் கோவை மாவட்ட வாசிகளாக இருந்தால், நீங்க இரண்டு மணி நேரத்தில் மரைன் வேர்ல்டு அடைந்து வீர்கள் என்றால் நம்பி தான் ஆக வேண்டும். கேரள மாநிலத்துக்கு இந்த கோடைக்கு போக பிளான் இருந்தால், நிச்சயம் இந்த இடத்தை மறக்காம போய் பாருங்க. உங்க குட்டீஸ் வேற லெவல் போய் என்ஜாய் பண்ணுவாங்க... நான் கிளம்பிட்டேன் எங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் நீங்க ரெடியா...!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+