Search
  • Follow NativePlanet
Share
» »வித விதமான உணவுகளை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் IRCTC – எப்படி புக் செய்வது தெரியுமா?

வித விதமான உணவுகளை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் IRCTC – எப்படி புக் செய்வது தெரியுமா?

அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நம்மில் பலர் சரியான உணவு சாப்பிட முடியாமல் தவிப்பது உண்டு. ஆனால் நாம் விஷயம் தெரியாமல் அப்படி தவித்து வருகிறோம், நீங்கள் ரயிலில் பயணம் செய்தபடியே IRCTC வழங்கும் சுவையான பல வகையான உணவுகளை ருசிக்கலாம் தெரியுமா? IRCTC தன் பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி தருவதோடு பயணத்தை விரும்புவோருக்கு ரயில் பயணம் அறுசுவையான உணவுகளையும் வழங்குகிறது.

Dominos's, Railofy, Relfood, Yatri, Olf, Spicy wagon மற்றும் train dhaba உள்ளிட்ட பல போர்டல்கள் உங்களது ரயில் பயணத்தில் சுவையான உணவுகளை வழங்குகிறது. நாம் இன்று குறிப்பாக Rail Recipe என்ற போர்டல் உங்களுக்கு வழங்கும் வித்தியாசமான அறுசுவை உணவுகளைப் பற்றியே நாம் பார்க்க போகிறோம். ரயில் பயணத்தில் அதை எப்படி ஆர்டர் செய்வது என்று பார்ப்போமா? நீங்கள் ரயிலில் இருந்தபடி ஆர்டர் செய்தால் போதும், உங்களது இருக்கைக்கே ருசியான உணவு வந்துவிடும்.

irctcthalicover

பலவகையான தாலி சாப்பாடுகளை (Thali) வழங்கும் IRCTC

நம் இந்தியா பன்முகத்தன்மை நிறைந்தது மற்றும் ஒவ்வொரு இந்திய தாலியிலும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெவ்வேறு உணவுகள் உள்ளன. இந்திய தாலிகளில் பக்க உணவுகள் முதல் சிற்றுண்டிகள் முதல் முக்கிய உணவுகள் மற்றும் இனிப்புகள் வரை அனைத்தையும் சிறிது சிறிதாகக் கொண்டுள்ளது. இந்த Rail Reciepe செயலியில் பலவகையான சுவையான தாலிகள் கிடைக்கின்றன. எனவே, அடுத்த முறை நீங்கள் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டால், ரயில் ரெசிபியில் இருந்து ரயிலில் தாலியை ஆர்டர் செய்ய மறக்காதீர்கள்.

IRCTC, Indian railways

மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது தாலிகள் மிகவும் மலிவானவை

நீங்கள் ஒரே தட்டில் வெவ்வேறு உணவு வகைகளை முயற்சிக்க விரும்பினால், தாலிகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சைட் டிஷ், ஸ்வீட் டிஷ், மெயின் டிஷ் மற்றும் சில சிற்றுண்டிகள் போன்ற பலவகையான உணவுகளுடன் அவை வருகின்றன. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து உணவுகளை சுவைக்க அவை ஒரு சிறந்த வழியாகும். தாலிகள் பொதுவாக புதியதாகவும் சூடாகவும் வழங்கப்படுகின்றன. குறைந்த செலவில் முழுமையான மற்றும் நிறைவான உணவை உண்ண தாலியை ஆர்டர் செய்வதே சரியான சாய்ஸ் ஆகும்.

IRCTC, Indian railways

IRCTCயால் அங்கீகரிக்கப்பட்ட செயலி

Rail Receipe என்பது IRCTC (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) அங்கீகரிக்கப்பட்ட இ-கேட்டரிங் நிறுவனமாகும், இது இரயில்களில் சுவையான, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குகிறது. உங்கள் ரயில் பயணத்தின் போது தரமான உணவை ஆர்டர் செய்து சாப்பிட இந்த செயலியை நீங்கள் உபயோகிக்கலாம்.

IRCTC, Indian railways

எத்தனை வகையான தாலிகள் பாருங்களேன்

1. வெஜ் தாலி - வெஜ் தாலியில் கிரேவி, சப்ஜி, சாலட், பருப்பு அல்லது கறி, இனிப்பு உணவுகள் மற்றும் பக்க உணவுகளான ரொட்டி, நாண், சப்பாத்தி, பராத்தா அல்லது சாதம் கிடைக்கும்.

2. நான் வெஜ் தாலி - அசைவப் பிரியர்களுக்கு பிடித்த இந்த தாலியில் பல்வேறு அசைவப் பொருட்கள் முட்டை கறி, கோழிக்கறி, மீன் குழம்பு மற்றும் ரொட்டி அல்லது சாதம் கிடைக்கும்.

3. நார்த் இந்தியன் தாலி - வெவ்வேறு கறிகள், குழம்புகள், பருப்பு வகைகள், சாதம், சாலட், தயிர், பப்பாளி, இனிப்பு உணவுகள் போன்ற பல்வேறு வட இந்திய உணவுகளுடன் பனீர் மக்கானி, லச்சா பராத்தா, பருப்பு பொரியல் கிடைக்கும்.

4. சவுத் இந்தியன் தாலி - புளி, பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் போன்ற பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி, தென்னிந்திய உணவுகளின் தனித்துவமான சுவைகளை நீங்கள் இந்த தாலியில் ருசிக்கலாம்.

5. ஜெயின் ஃபுட் தாலி - ஜெயின் உணவுகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், ஆனால் இந்த தாலியில் தரமான ஜெயின் உணவுகளை ருசிக்கலாம்.

6. சாத்விக் ஃபுட் தாலி - சாத்வீக உணவுகள் அனைத்தும் ஊட்டச்சத்து, ஆரோக்கியமான மற்றும் தூய்மையான உணவுகள் மற்றும் உயர்தர உணவாகும்.

7. வெஜ் டீலக்ஸ் தாலி - தாலியில் பட்டர் சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, பனீர் மக்கானி, பப்பட், ரைதா, பருவகால காய்கறிகள் போன்ற பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கும்.

8. வெஜ் மகாராஜா தாலி - ரயிலில் பிரபலமான ராயல் மஹாராஜா தாலியில் பன்னீர், வெண்ணெய் ரொட்டி, பனீர் மக்கானி, பருப்பு பொரியல், மிக்ஸ்-வெஜ், வெஜ் ரைதா, பப்பட் மற்றும் ஊறுகாயுடன் கூடிய சாலட் போன்ற பல்வேறு அரச உணவுகள் கிடைக்கும்.

9. இவை மட்டுமின்றி மகாராஷ்டிரா தாலி, பெங்காலி தாலி, பஞ்சாபி தாலி போன்ற விசேஷ தாலிகளும் கிடைக்கும்.

எப்படி ஆர்டர் செய்வது?

IRCTCயின் www.ecatering.irctc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களது PNR நம்பரை கொடுத்து, உங்களுக்கு பிடித்த உணவை செலக்ட் செய்து, ஆர்டர் செய்து விடுங்கள், அல்லது

RailRecipe இலிருந்து ரயிலில் தாலியை ஆர்டர் செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.railrecipe.com ஐப் பார்வையிடவும் அல்லது எங்கள் RailRecipe Food on Train செயலியைப் பதிவிறக்கவும். அதுமட்டுமின்றி 8448440386 என்ற எண்ணிலும் எங்களை அழைக்கலாம்.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+