Search
  • Follow NativePlanet
Share
» »மின்சார கண்ணா படத்தில் காண்பிக்கப்பட்ட இந்த வீடு நம்ம ஊரில் உள்ள ஒரு ஹோட்டலா?

மின்சார கண்ணா படத்தில் காண்பிக்கப்பட்ட இந்த வீடு நம்ம ஊரில் உள்ள ஒரு ஹோட்டலா?

நீங்கள் 90ஸ் கிட்ஸ்களில் ஒருவராக இருந்தால் நிச்சயம் திரைப்பட நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை பார்த்து இருப்பீர்கள். அதில் அவர்கள் ஜெர்மனியில் இருப்பது போன்ற சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதில் காண்பிக்கப்பட்ட வீடு, உண்மையிலேயே நம்ம ஊரில் ஒரு ஹோட்டல் தானாம். அந்த ஹோட்டலில் உள்ள ரூம்களில் தங்க ஒரு நாளைக்கு ரூ.8,000 முதல் வாடகை வசூலிக்கப்படுகிறதாம்!

மலரும் 9௦ஸ் கிட்ஸ்களின் நினைவுகள்

1980 பிற்பகுதி மற்றும் 1990 முதல் 1995 களில் பிறந்தவர்கள் 90ஸ் கிட்ஸ் என்றழைக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் 90ஸ் கிட்ஸ்களின் இனிமையான கடந்த காலத்தை நினைப்பூட்டும் பல மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் பகிரப்பட்டு வருகின்றன. நாம் குழந்தைகளாக இருக்கும் போது நிச்சயம் பல தமிழ் திரைப்படங்களை கண்டு இருப்போம். அவற்றில் ஒன்று தான் நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணா திரைப்படம்.

fortune hotel

மின்சார கண்ணா திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட வீடு

நாம் குழந்தை பருவத்தில் விரும்பி பார்த்த இந்த திரைப்படத்தில் மணிவண்ணன், K.S ரவிகுமார், விஜய் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கதாநாயகியை ஒரு அவர்களின் வீட்டுக்கு அழைப்பார்கள். நாமும் கூட என்னடா இந்த வீடு மிகவும் பிரமாண்டமாக இருக்கிறதே. ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தனிநபர் வசிக்கிறார்கள் என்று கூறுகிறார்களே, கூடவே லிப்ட் வசதியும் இருக்கிறதே என்று வியந்து பார்த்திருப்போம்.

ஊட்டியில் அமைந்துள்ள நடிகர் விஜயின் ஜெர்மன் வீடு

உண்மையில் அந்த திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட வீடு ஒரு வீடு அல்ல. அது பார்ச்சூன் ரிசார்ட் சுலிவன் ஊட்டி எனப்படும் ஒரு ஸ்டார் ஹோட்டலாகும். ஊட்டியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு செல்லும் எவரும், இதை ஒரு தனி வீடியோவாகவே எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுகின்றனர். ஜெர்மனியில் இருப்பது போன்று காண்பிக்கப்பட்ட இந்த வீடு நம் ஊட்டியில் தான் இருக்கிறது, பாருங்கள் மக்களே என்று கேப்ஷன் போடுகின்றனர்.

fortune hotel ,ooty

பார்ச்சூன் ரிசார்ட் சுலிவன் ஊட்டி

ஊட்டியில் உள்ள பார்ச்சூன் ரிசார்ட் சுலிவன் கோர்ட் ஊட்டியில் ஓய்வெடுப்பதற்கு ஏற்ற இடமாகும். இந்த அழகான குடும்ப ரிசார்ட் 67 அறைகளைத் கொண்டுள்ளது, அவற்றில் பெரும்பாலான அறைகள் சரிவுகளின் அழகிய காட்சியை வழங்குகின்றன, மேலும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வேடிக்கை நிறைந்த விடுமுறைக்கு சிறந்த இடமாகும். ஃபார்ச்சூன் ரிசார்ட் சல்லிவன் கோர்ட், ஊட்டி நகர மையத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் உள்ளதால், வசதியான இடமாக உள்ளது.

அறைகளின் கட்டணங்கள்

டீலக்ஸ், டீலக்ஸ் ஃபாரெஸ்ட் வியூ, டீலக்ஸ் மௌண்டெயின் வியூ, பார்ச்சூன் கிளப் ரூம், பார்ச்சூன் கிளப் ஃபாரெஸ்ட் வியூ, பார்ச்சூன் கிளப் மௌண்டெயின் வியூ, பிரெசிடென்ஷியல் சூட் என பல வகையான அறைகள் உள்ளன. இங்கே உங்களுக்கு காம்ப்ளிமென்டரி காலை உணவு, இலவச வைஃபை, உலகத்தர சர்வீஸ் வழங்கப்படுகிறது. பல வகையான ருசியான உணவுகளை தயார் செய்யும் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் மற்றும் பார் வசதியும் உண்டு. ரூம் வாடகை ரூ.7,000 முதல் ரூ.20,000 வரை செல்கிறது.

நீங்கள் ஊட்டி சென்றால் இந்த மின்சார கண்ணா வீட்டில் தங்கிப் பாருங்கள்!

More News

    Read more about: ooty tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+