Search
  • Follow NativePlanet
Share
» »அனைத்து ரயில்களுக்கும் பின்னால் உள்ள ‘X’ குறியீடு – அதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா?

அனைத்து ரயில்களுக்கும் பின்னால் உள்ள ‘X’ குறியீடு – அதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா?

ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் இந்த 'X' குறியீட்டை ரயிலின் கடைசி பெட்டியில் பார்த்து இருப்பீர்கள், ஆனால் 'X' குறியீடு எதனால் வரையப்பட்டிருக்கிறது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அதற்கு பல காரணங்கள் உண்டு, மொத்தமாக பயணிகளின் பாதுகாப்பிற்கு குறுக்கு அடையாளம் அல்லது 'X' அவசியம். ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா?

இந்திய ரயில்வே அளித்த விளக்கம்

ட்விட்டரின் புதிய லோகோ வெளியான பிறகு, சமீபத்தில், தென்மேற்கு ரயில்வே இந்திய ரயில்வே ரயிலின் படத்தை ட்வீட் செய்தது, அதில் பெரிய மஞ்சள் நிற 'X' இருந்தது. ரயில்களில் உள்ள பெரிய 'X' அடையாளம் என்ன தெரியுமா என்று கேட்டது. இப்போது ரயிலின் பின்புறத்தில் உள்ள 'X' குறி என்னவென்று யோசிப்பவர்களுக்கு, அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

1

ட்விட்டர் லோகோவில் X

ட்விட்டர் இப்போது புதிய லோகோவைக் கொண்டுள்ளது, அதை எலோன் மஸ்க் வெளியிட்டார். நீல நிற பறவை சின்னம் தற்போது புதிய லோகோவான 'X' மூலம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு சமூக ஊடக நெட்வொர்க்கை வாங்கிய பிறகு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி செய்த சமீபத்திய குறிப்பிடத்தக்க மாற்றம் இதுவாகும். அவர் ட்விட்டர் லோகோவை மாற்றியதில் இருந்து இந்திய ரயில்களின் பின்னால் உள்ள 'X' பேசு பொருளாக மாறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்று

1853 இல் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய ரயில்வே, ஆரம்ப நாட்களில், ஆதார பற்றாக்குறை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அரசியல் எதிர்ப்பு என பல சவால்களை எதிர்கொண்டது. புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், பாதைகளின் மின்மயமாக்கல் மற்றும் புதிய பாதைகள் மற்றும் நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம் இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்கு உட்பட்டு இப்போது உலகின் மிக பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக மாறியுள்ளது. அப்போதிலிருந்து ரயில்களின் கடைசி பெட்டியில் 'X' குறியீடு இருந்து வருகிறது.

'X' குறியீட்டின் அர்த்தங்கள்

1. எக்ஸ் என்பது ரயிலின் கடைசிப் பெட்டியைக் குறிக்கிறது.

2. ரயிலின் பின்புறம் உள்ள எக்ஸ் அடையாளத்தைப் பார்ப்பதன் மூலம், ரயில் எந்தப் பெட்டிகளும் விடுபடாமல் ரயில் முழுவதுமாக கடந்துவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள்.

3. 'X' என்ற எழுத்து காலையில் பயன்படுத்தப்படுகிறது. இரவில், கடைசிப் பெட்டியில் எல்இடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது, அது சிமிட்டிக்கொண்டே இருக்கும், இது பார்வை குறைவாக இருக்கும்போது ரயில் கடந்து சென்றதை உறுதிப்படுத்துகிறது.

4. ரயிலின் கடைசிப் பெட்டியில் 'X' சின்னம் இல்லை என்றால், அது ரயிலின் அவசர நிலையைக் காட்டுகிறது அல்லது சில பெட்டிகள் விடுபட்ட நிலையில் ரயில் ஓடுகிறது.

5. மேற்கண்ட சூழ்நிலையில், ரயில்வே அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், விபத்து ஏற்பட்டால் விரைவாக செயல்படவும் இது உதவுகிறது. பிரிக்கப்பட்ட/விடப்பட்ட பெட்டிகளைக் கண்டறிவதற்கும், உள்ளே பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களால் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும்.

6. கூடுதலாக, கடைசி வாகனத்தைக் குறிக்கும் வாகனத்தின் பின்புறத்தில் 'LV' (மஞ்சளில் கருப்பு) கொண்ட சிறிய பலகை இணைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நமக்கு தெரியாத விஷயம் இப்போது நாம் தெரிந்துக் கொண்டோம் அல்லவா!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+