Search
  • Follow NativePlanet
Share
» »உலகளவில் சிறந்த 5 இந்திய நகரங்களின் புட் டெஸ்டினேசன் எது?

உலகளவில் சிறந்த 5 இந்திய நகரங்களின் புட் டெஸ்டினேசன் எது?

சங்க கால குறிப்புகளில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, முதுவேனில் என, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தனித்தனி உணவு வகைகளை பிரித்து வைத்துள்ளார்கள். எந்த சுவையுள்ள உணவை எந்த பொழுதில் கொடுக்க வேண்டும் என, காலத்திற்கேற்ப உணவு வகை வகுக்கப்பட்டுள்ளது.

அதை போலவே வயதானவர்களுக்கு என்ன உணவை கொடுக்க வேண்டும் என்பன போன்ற அரிய, அறிவியல் ரீதியான காரணங்களுடன் சங்க கால குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. அந்தளவுக்கு உணவு, அது சார்ந்த சுவைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் நிலம், நீர் ஆகிய இரண்டை சார்ந்தே, உணவின் சுவையும் அமைகிறது.

அதாவது, நிலமும், நீரும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், அங்கு தயாரிக்கப்படும் உணவு அவ்வளவு சுவையாகவும், மிகச் சிறப்பாகவும் அமையும் என்பதை, அந்தந்த ஊர் பகுதியில் சிறந்த உணவுகளை தேடி அருந்தும் நபர்களுக்கு தெரியும்.

foodcountries1

100 சிறந்த உணவு நகரங்கள்

உலகளவில் சமையல் மற்றும் பயண வழிகாட்டியான 'டேஸ்ட்அட்லஸ்', உள்ளூர் உணவுகளை மாதிரியாகக் கொண்டு உலகின் முதல் 100 நகரங்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது. அதில் 5 இந்திய நகரங்கள் சிறந்த உணவு இடங்கள் என்ற தகுதியை பெற்றுள்ளது.

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், உள்ளூர் அளவில் குறிப்பிடத்தக்க தரவுத் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது,' Google' உணவக மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் நுாறு இடங்கள் சிறந்த உணவு இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில், இந்தியாவில் ஐந்து நகரங்களும் சிறந்த உணவு இடங்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மும்பை, ஹைதராபாத், புது தில்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள், உலக அளவில் சமையல் ஹாட்ஸ்பாட் பட்டியலில் முறையே 35வது, 39வது, 56வது, 65வது மற்றும் 92வது இடத்தில் உள்ளன.

டேஸ்ட்அட்லஸில் பட்டியலிடப்பட்ட இந்திய உணவுகள் மற்றும் உணவகங்களில், லக்னோவின் 'அவதி கபாப்கள்', லக்னோவின் நிஹாரி முதல் மும்பை மக்களின் மதிய உணவு வடா பாவ் வரை இடம்பெற்றுள்ளன.

16,601 நகரங்களில், 395,205 (271,819 செல்லுபடியாகும்) பயனர் வாக்குகளின் அடிப்படையில், 100 நகரங்கள், அவற்றில் பொதுவாக வழங்கப்படும் பிராந்திய மற்றும் தேசிய உணவுகளுக்கான சிறந்த சராசரி மதிப்பீடுகளைப் பதிவு செய்து, சிறந்த உணவு இடங்கள் பட்டியல் வெளியிட்டுள்ளதாக, டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 top 5 Indian cities in the worlds top 100 food destinations?

அது யாருய்யா டேஸ்ட் அட்லஸ்

டேஸ்ட் அட்லஸ் என்பது பாரம்பரிய உணவுகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உண்மையான உணவகங்களை வரைபடமாக்கும் ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இந் நிறுவனம், சிறந்த உணவகங்கள், உணவு நகரங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை பட்டியலிட்டுள்ளனர்.

டஜன் கணக்கான உணவுகள், அவை எங்கு உள்ளன, அதன் தனிச் சிறப்பு குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்து, அவற்றை வெளியிடாமல் வைத்துள்ளது. பிரபலமானவை, அத்துடன் உலகின் ஒவ்வொரு நகரம், பகுதி மற்றும் கிராமத்தின் மறக்கப்பட்ட உணவின் சுவைகள் மற்றும் நறுமணங்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறது.

உலகில் எங்கு சிறந்த உள்ளூர் உணவு கிடைக்கும் என்பதை எப்படி தேடுவது, எப்படி முயற்சிப்பது அந்த உணவை சாப்பிட என, கேள்வி கேட்கும் உங்களுக்கு அதற்கான டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் விளக்குகிறது, அது சார்ந்த தகவல்களையும் வழங்குகிறது.

பிரபலமான உணவுகள், சில பிரபலமான உணவகங்கள், உள்ளூர் உணவுகளை மாதிரியாகக் கொண்டு, இணையதளம் வாயிலாக அவற்றை கண்டறிந்து வகைப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு நகரத்தின் கீழும் கொடுக்கப்பட்ட பட்டியல் மற்றும் உணவுகள் மற்றும் உணவகங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

டேஸ்ட் அட்லஸ் தரவரிசையின்படி, மும்பை பேல்பூரி, பாவ் பாஜி, வடா பாவ், மோடக் மற்றும் பானிபூரி பிரபலமானது. பட்டியலிடப்பட்ட சிறந்த உண்மையான உணவகங்களில், ராம் ஆஷ்ரயா, ஸ்ரீ தாக்கர் போஜனலே, நவாப் சாஹேப், கஃபே மெட்ராஸ், லியோபோல்ட் கஃபே, தி பாம்பே கேண்டீன் மற்றும் பாபா ஃபலூடா ஆகியவை அடங்கும்.

அதிகம் விரும்பும் பானம் டீ

டேஸ்ட்அட்லஸ் உலகின் தலைசிறந்த மது அல்லாத பானங்களில், மசாலா தேநீர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அது என்ன நீங்கள் பட்டியல் இடுவது எங்களுக்கு தெரியும் டீ தான் பெரும்பாலானவர்களின் உணவு. அதை சுவையாக அருந்த தேடி அலைவோம்னு சொல்லாம நீங்க சொல்வது தெரியுது யூத்ஸ்..

ஏலக்காய், இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று இந்த தேநீர் குறித்து சொன்ன உடனே நானே டீ குடிக்க போயிட்டு வந்து தான் இந்த கட்டுரையின் மீதி பகுதியை நிறைவு செய்தேன் என்றால் பாருங்களேன்.

டேஸ்ட்அட்லஸ் தரவரிசையில் இடம்பிடித்த மற்ற பிரபலமான இந்திய பானம் லஸ்ஸி. பஞ்சாபின் விருப்பமான பானத்தின் டேஸ்ட்அட்லஸில் பல இடங்களைப் பெற்றுள்ளன. 2023-24 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 16 பால் பானங்களில் மாம்பழ லஸ்ஸி முதலிடத்தில் உள்ளது.

பாரம்பரிய பஞ்சாபி லஸ்ஸி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஸ்வீட் லஸ்ஸி உலகின் ஐந்தாவது சிறந்த பால் பானமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2023 இல், TasteAtlas அதன் "உலகின் 50 சிறந்த ஆட்டிறைச்சி உணவுகளின்" தொகுப்பை வெளியிட்டது, இதில், இரண்டு இந்திய படைப்புகளான ரோகன் ஜோஷ் மற்றும் கலூட்டி கபாப் முறையே 23 மற்றும் 26 வது இடத்தைப் பிடித்தன.

ஜூன் 2023 இல், டேஸ்ட்அட்லஸ் கொச்சியின் புகழ்பெற்ற உணவகமான பாராகனை உலகின் மிகச் சிறந்த உணவகங்களில் ஒன்றாக அறிவித்தது. இது உலகின் 150 புகழ்பெற்ற உணவகங்களில் 11வது இடத்தைப் பிடித்தது.

மேலும் அவர்களின் பிரியாணி ஒரு ஐகானிக் உணவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி சிறந்த உள்ளூர் உணவும்,அது எங்குள்ளது என்கிற பட்டியல் நீள்கிறது... ஒரு முறை அந்த பட்டியலை பாருங்கள்... உணவை வைத்து ஊரின் பெயரும், ஊரின் பெயரை வைத்து உணவும் புகழ்பெற்ற விவரங்கள் நமக்கு தெரியாத என்ன.... ஒரு ஊருக்கு போகும்போது எதை பார்க்கிறீங்களோ இல்லமோ, அங்குள்ள உள்ளூரில் சிறந்த உணவை சுவைத்து பார்க்காம வருவோமா என்ன.

என்னதான் இருக்கட்டும் தமிழர்கள் ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை மட்டுமல்லாமல் பானங்களையும் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அதை எந்த நாகரிகத்தையும் எற்று கொண்டு வாழ்ந்தாலும், உணவை தேர்வு செய்வதில் நம் முன்னோர்கள் விட்டு சென்ற சான்றுகளையும், அறிவியல் சார்ந்த நுட்பங்களையும் நம் எப்போதும் மறக்கக்கூடாது.

'ஸ்ட்ரீட் புட்' ஆக இருந்தாலும், காலை, மாலை பானமாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும், அது ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில், சங்க காலம் முதல் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அக்கறை காட்டியுள்ளனர் என்பதை பல சான்று ஆவணங்கள் வாயிலாக அறியலாம். எது எப்படி இருக்கட்டும் நமக்கு சோறு முக்கியம்ங்க... மறக்காதீங்க ...!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+