Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக விலையுயர்ந்த விமான டிக்கெட் இது தானாம் – டிக்கெட் விலை ரூ.50 லட்சம்!

உலகின் மிக விலையுயர்ந்த விமான டிக்கெட் இது தானாம் – டிக்கெட் விலை ரூ.50 லட்சம்!

விமானத்தில் செல்வதே நம்மை போன்ற பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு ஒரு கனவாகவே உள்ளது. ஆனால் ஆடம்பர ஹோட்டல்கள் முதல் விமான பயணம் வரை மிகவும் விலையுயர்ந்த விஷயங்களையும் அனுபவிக்க ஒரு பணக்கார கூட்டமே நம் நாட்டில் உள்ளது. அந்த வகையில் உலகின் மிக விலையுயர்ந்த விமான டிக்கெட்டை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் மேல், ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவாறு தான் அந்த விமானத்தில் உங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகிறது!

உலகின் மிக விலையுயர்ந்த விமான டிக்கெட்

நாம் ஆடம்பரத்தைப் பற்றி பேசும்போது, வானமே எல்லை! ஆனால் வானத்தில் ஆடம்பரம் என்று வரும்போது எவ்வளவு தூரம் சிந்திக்க முடியும்? சரி இது முற்றிலும் வரம்பற்றது! மிகவும் விலையுயர்ந்த விமான டிக்கெட்டின் விலை கிட்டத்தட்ட 53 லட்சம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா, அந்த வகையான பணத்தில், நீங்கள் ஒரு அரச குடும்பத்தைப் போல நடத்தப்படுவீர்கள்.

airbus costlisest flight

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஆடம்பரங்கள்

எதிஹாட் ஏர்வேஸின் தி ரெசிடென்ஸ் உலகின் மிக விலையுயர்ந்த விமானத் தொகுப்பின் சாதனையைப் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் அது வழங்கும் வசதிகளைப் பார்க்கும் போது நமக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது. மேலும் விமான பென்ட்ஹவுஸில் தூங்கலாம், கற்பனை செய்ய முடியாத ஆடம்பரங்களை அனுபவிக்கலாம். ஷாம்பெயின் முதல் கேவியர் வரை அனைத்தையும் நீங்கள் இங்கே அனுபவிக்கலாம்.

ஒரு டிக்கெட் விலை ரூ.53 லட்சம்

லண்டனில் இருந்து மெல்போர்ன் செல்லும் இந்த பயணத்திற்கு நீங்கள் ஒரு டிக்கெட் பெற 53 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் தொகையில், ஒருவர் 123 சதுர அடி கொண்ட தி ரெசிடென்ஸ் எனப்படும் மூன்று அறைகள் கொண்ட சொகுசுப் பெட்டியில் பயணம் செய்வர். இது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஆடம்பரங்களுடன் கூடிய வானத்தில் ஒரு பென்ட்ஹவுஸ் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

boieng747expensiveflight

தொலைக்காட்சிகள், லவுஞ்ச்வியர் மற்றும் மினி குளிர்சாதன பெட்டி

உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உங்களுக்கு என ஒரு தனி பட்லரும் வழங்கப்படுவார். பெரிய திரை தொலைக்காட்சிகள், லவுஞ்ச்வியர் மற்றும் மினி குளிர்சாதன பெட்டி ஆகியவை மற்ற வசதிகளில் அடங்கும். அதே போல உங்களுக்கு ஒரு தனி இரட்டை சோஃபாவும் வழங்கப்படும்.

அரச குடும்ப மரியாதை

அதனுடன் நீங்கள் விமான நிலையத்தில் தனி செக்-இன், விஐபி லவுஞ்ச் வசதிகள் மற்றும் நிகழ்வுகளை முன்பதிவு செய்வதற்கும், உணவகத்தில் ஒரு டேபிளை முன்பதிவு செய்வதற்கும் தனிப்பட்ட பயண வரவேற்புரையும் பெறுவீர்கள். நீங்கள் சிறப்பு விருந்தினராக இருப்பதால், நீங்கள் விமானத்தில் ஏறியவுடன் விமானியின் தனிப்பட்ட கடிதம் உங்களை வந்தடையும். அதே போல சுவையான பல நாட்டு உணவு வகைகளையும் நீங்கள் இங்கே ருசிக்கலாம்.

இந்த உயர்தர டிக்கெட்டை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: travel guide flight tickets
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+