Search
  • Follow NativePlanet
Share
» »இந்த இடம் தான் இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து – தெரியுமா உங்களுக்கு?

இந்த இடம் தான் இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து – தெரியுமா உங்களுக்கு?

உங்களுடைய பக்கெட் லிஸ்டில் சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளதா? குறைந்த பட்ஜெட்டில் இங்கே செல்லுங்கள்! லட்சங்கள் தேவையில்லை, சில ஆயிரங்களில் சுவிட்சர்லாந்திற்கு சென்ற அனுபவத்தை பெற்றிடுங்கள். பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே சுவிட்சர்லாந்து போலவே இருக்கும் கஜ்ஜியார் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை கொண்ட கஜ்ஜியாருக்கு சுற்றுலா செல்லுங்கள். காலம் கடந்த கோவில்களும், திபெத்திய நாகரீகமும் நிறைந்த கஜ்ஜியார் ஏன் இந்தியாவின் மினி-சுவிட்சர்லாந்து என்று குறிப்பிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமே அல்ல.

இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து

இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து

அடர்ந்த பைன் மற்றும் தேவதாரு காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய அழகிய தட்டு வடிவ பீடபூமியான கஜ்ஜியார் டல்ஹவுசிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கஜ்ஜியார் அதன் அழகிய புல்வெளிகளுக்காகவும், அதன் நடுவே இருக்கும் கண்கவர் ஏரிக்காகவும், பைன் மரங்களுக்காகவும் அறியப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்திற்குள் ஒருவர் நுழையும் தருணத்திலேயே அவரின் மனதை பறி கொடுப்பது நிச்சயம். பைன் மற்றும் தேவதாரு காடுகளின் அடர்ந்த மற்றும் பரந்த புல்வெளி பகுதிகள், ஆங்காங்கே இடைவெளியில் குடிசைகள், குழப்பமற்ற தெருக்கள், அமைதியான சூழல் என அனைத்தும் சுவிஸ் கிராமப்புறங்களை ஒத்த தோற்றத்தை அளிக்கின்றன.

ஆங்கிலயேரால் பெயரிடப்பட்ட இடம்

ஆங்கிலயேரால் பெயரிடப்பட்ட இடம்

கஜ்ஜியார் இந்தியாவின் "மினி சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. சுவிட்சர்லாந்தின் துணை ஆலோசகரும், சான்சரியின் தலைவருமான திரு. வில்லி டி. பிளேஸர் இந்த இடத்திற்கு வருகை தந்த போது, இதன் அழகில் மயங்கி, அடடே இது பார்ப்பதற்கு சுவிட்சர்லாந்து போலவே இருக்கிறதே என நினைத்து இந்த இடத்திற்கு அப்பெயரை சூட்டினார். அவர் ஒரு மஞ்சள் சுவிஸ் நடைபாதையின் அடையாள பலகையை வைத்தார், இது சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்னஸிலிருந்து கஜ்ஜியாருக்கு - 6194 கிமீ தூரத்தைக் காட்டுகிறது. இந்த நிகழ்வு 1992ல் நடந்து இருந்தாலும் கூட, அந்த இடத்தின் ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.

கண்கவர் அழகில் மனதை பறிகொடுப்பது நிச்சயம்

கண்கவர் அழகில் மனதை பறிகொடுப்பது நிச்சயம்

சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய மலை வாசஸ்தலம், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இந்த வினோதமான மற்றும் கனவுகள் நிறைந்த இடத்தில் நீங்கள் மிகவும் சௌகரியமாக உணருவீர்கள். இதைப் பார்வையிடும் பெரும்பாலான மக்கள் அதன் நிலப்பரப்பால் ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் இயற்கையால் அமைக்கப்பட்ட இந்த அற்புதமான பனோரமாவை தங்கள் கண்களுக்கு விருந்தளிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்பவது இல்லை.

கஜ்ஜியார் ஏரியை காணாமல் கஜ்ஜியார் சுற்றுலா முழுமையடையாது. அடர்ந்த சிடார் காடுகளால் சூழப்பட்ட புல்வெளிகளுக்கு நடுவே ஏரி தனியாக அழகாக இருக்கிறது, மேலும் இப்பகுதியின் ஒட்டுமொத்த அழகிற்கு பங்களிப்பதில் இந்த ஏரி பெரும் பங்கு வகிக்கிறது. ஏரியிலிருந்து கைலாஷ் மலையின் கண்கவர் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.

சாகசங்கள் நிறைந்த கஜ்ஜியார்

சாகசங்கள் நிறைந்த கஜ்ஜியார்

நீங்கள் மலையேற்ற ஆர்வலராக இருந்தால், கலாடாப் வனவிலங்கு சரணாலயத்தில் நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம். இங்குள்ள நிலப்பரப்பு அடர்ந்த ஊசியிலையுள்ள காடுகள் மற்றும் பல நீரோடைகளால் சூழப்பட்டுள்ளது, இவை இரண்டும் மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயணங்களுக்கு சரியான சூழ்நிலையை உருவாக்குகின்றன.

சரணாலயத்தில் உள்ள இமயமலை கருப்பு மார்டன், குரைக்கும் கோரல், சிறுத்தை, குள்ளநரி, லாங்கூர் மற்றும் கரடி வனவிலங்குகளையும் கண்டு களிக்கலாம். கஜ்ஜியாரில் உள்ள புல்வெளிகளைச் சூழ்ந்திருக்கும் அந்த அடர்ந்த காடுகள் சில அழகான கிராமங்களின் தாயகமாகும். ஆப்பிள் தோட்டங்களுக்கும், பனி மூடிய மலைகளுக்கும் பெயர் பெற்ற கஜ்ஜியாருக்கு சென்று வாருங்கள், அமைதி மட்டுமல்லாமல் இங்கு சாகச விரும்பிகள் பாராகிளைடிங், சோர்பிங் மற்றும் குதிரை சவாரி உள்ளிட்ட சில சாகச விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

More News

    Read more about: khajjiar
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+