Search
  • Follow NativePlanet
Share
» »வாட்ஸ்அப் மூலம் Live PNR தகவல்கள் பெறுவது எப்படி, ஃபுட் ஆர்டர் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் Live PNR தகவல்கள் பெறுவது எப்படி, ஃபுட் ஆர்டர் செய்வது எப்படி?

ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட பயணத்தை வழங்கும் வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் பல முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது. அதில் ஒன்றாக இப்போது, பயணிகள் இப்போது நிகழ்நேர ரயில் அட்டவணை தகவல் மற்றும் அவர்களின் PNR நிலையை WhatsApp மூலம் பார்க்கலாம். இந்த அம்சத்தின் மூலம் IRCTC வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் ரயில் தொடர்பான தகவல்களை எளிதாகக் கண்டறிய முடியும். கூடுதல் பயன்பாடுகள் எதையும் பதிவிறக்கம் செய்யாமல் இந்தக் செயலியைப் பயன்படுத்தி அவர்கள் ரயில் நிலை, உணவு ஆர்டர் மற்றும் பிற பயணம் தொடர்பான தகவல்களைக் கண்காணிக்க முடியும்! இந்த ஐடியா நன்றாக இருக்கிறது அல்லவா?

pnr status through whatsapp

Railofyயின் முயற்சி

மும்பையை தளமாகக் கொண்ட ஒரு தொடக்கமான Railofy - Rodeo Travel Technologies உடன் இணைந்து இந்த அம்சம் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் பயணிகள் PNR நிலை, நேரலை ரயில் நிலை, முந்தைய மற்றும் வரவிருக்கும் நிலையங்களின் விவரங்கள் மற்றும் பிற ரயில் பயணத் தகவல்களை WhatsApp chatbot மூலம் பெறலாம்.

IRCTC, Indian railways

தொந்தரவில்லாத ரயில் பயணம்

வாட்ஸ்அப் சாட்போட்டில் 10 இலக்க PNR எண்ணை உள்ளிட்டால் அனைத்து தகவல்களும் கிடைக்கும். நிகழ்நேர ரயில் நிலைக்கு, ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள் 139 எண்களைக் கொண்ட ரயில்வே உதவி மையத்தையும் அழைக்கலாம். அது மட்டுமின்றி உணவு ஆர்டரையும் நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமே செய்யலாம்.

IRCTC, Indian railways

Railofy வழியாக PNR நிலை மற்றும் நேரலை ரயில் தகவல்களைப் பெறுவது எப்படி?

1. Railofy இன் WhatsApp சாட்போட்டின் +91-9881193322 என்ற எண்ணை உங்கள் தொடர்புகளில் சேமிக்கவும்

2. சாட் விண்டோவை தொடங்க WhatsApp இல் Railofy ஐத் தேடவும்.

3. சாட் விண்டோவில் உங்கள் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும்.

4. அவ்வளவுதான், ரயில் பயணம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட அனைத்து தகவல்களையும் Railofy chatbot இலிருந்து பெறுவீர்கள்.

IRCTC, Indian railways

உணவையும் சுடச்சுட ஆர்டர் செய்யலாம்

பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது உணவு ஆர்டர்களையும் செய்யலாம். IRCTC செயலியான Zoop ஐப் பயன்படுத்தி பயணிகள் ஆன்லைனில் உணவை வாங்கலாம் மற்றும் அவர்கள் ஆர்டர் செய்யும் உணவு பயணிகளின் இருக்கைகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படுகிறது.

IRCTC, Indian railways

Zoop ஆப்பில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?

1. வாட்ஸ்அப் சாட்போட்டின் தொலைபேசி எண்ணான +91 7042062070 முதலில் சேமிக்கவும்.

2. மாற்றாக நீங்கள் [https://wa.me/917042062070] ஐயும் பார்வையிடலாம்.

3. Zoop ஆப்பிற்கான வாட்ஸ்அப் சாட்போட்டைத் திறக்கவும்.

4. உங்கள் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும்.

5. அடுத்ததாக, உணவு டெலிவரிக்கு விரைவில் கிடைக்கும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

6. Zoop சாட் போட்டைப் பயன்படுத்தி உணவகங்கள் வழங்கும் விருப்பங்களின் பட்டியலிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

7. உங்கள் ஆன்லைன் உணவு ஆர்டரைச் செய்து, அதற்குப் பணம் செலுத்திய பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.

8. ரயிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுத்தத்திற்கு வந்தவுடன், Zoop உங்கள் உணவை உங்களிடம் வழங்குகிறது.

அடுத்தமுறை ரயிலில் செல்லும் போது இப்படி செய்து பாருங்களேன்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+