Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தின் பிரபல கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான இலவசச் சுற்றுலாவை அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தின் பிரபல கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான இலவசச் சுற்றுலாவை அறிவித்த தமிழக அரசு!

ஆம்! நீங்கள் படித்தது உண்மை தான். மூத்த குடிமக்களுக்கான இலவச ஆடி மாதச் சுற்றுலாவை வழங்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. உங்கள் வீட்டில் 60 வயதிற்கு மேற்ப்பட்ட நபர்கள் இருந்தால், இந்த இலவச சுற்றுலாவுக்கு அவர்களும் செல்லலாம். ஆடி மாதத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்கள், தமிழகத்தின் பிரபல அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மீக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே பார்ப்போம்!

மூத்த குடிமக்களுக்கான இலவச கோயில் சுற்றுலா

மூத்த குடிமக்களை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வயது மூப்பின் காரணமாகவும். பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்களுக்கு ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் அழைத்து செல்லப்படுவர்.

ஆடி மாத சுற்றுலாவுக்கு 1,000 பேர் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு தொடங்கும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

tamilseniorcitizenstempletour1

சென்னையில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர்

2. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில்,பாரிமுனை

3. அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில், திருவொற்றியூர்

4. அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு

5. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

தஞ்சாவூரில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. தஞ்சாவூர் பெரியகோயில்

2. அருள்மிகு வராகியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்

3. அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

4. அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர்

5. அருள்மிகு கர்ப்பக ரட்சாம்பிகை திருக்கோயில், பட்டீஸ்வரம்

6. அருள்மிகு துர்கையம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்

seniorcitizens1

கோயம்புத்தூரில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை

2. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி

3. அங்காளம்மன் திருக்கோயில், ஆனைமலை

4. அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல்

5. அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோவை

திருச்சியில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர்

2. அருள்மிகு கமலவள்ளி நாச்சியார் திருக்கோயில், திருவானைக்காவல்,

3. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், சமயபுரம்

4. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

5. அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் திருக்கோயில், உறையூர்

மதுரையில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை

2. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

3. அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், மடப்புரம்

4. அருள்மிகு ராக்காயியம்மன் திருக்கோயில், அழகர்கோவில்

5. அருள்மிகு ஜனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்

திருநெல்வேலியில் அழைத்து செல்லப்படும் கோயில்கள்

1. அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

2. அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல்

3. அருள்மிகு ஒன்னுவிட்ட நங்கையம்மன் திருக்கோயில், சுசீந்திரம்

4. அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில், குழித்துறை

இலவச சுற்றுலாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி

· இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்துக்களாகவும் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

· இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறையின் http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய சான்றிதழ்களுடன், சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

· இது தொடர்பான தகவல்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டணமில்லா எண்ணை 1800 4253 1111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். வெவ்வேறு மண்டலங்களுக்கான குறிப்பிட்ட தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன:

மண்டலம் வாரியாக உதவி எண்கள்

· சென்னை மண்டலம்: 99417 20754

· தஞ்சாவூர் மண்டலம்: 044-29520937

· கோவை மண்டலம்: 0422-2244335

· திருச்சி மண்டலம்: 0431-2232334

· மதுரை மண்டலம்: 0452-2346445

· திருநெல்வேலி மண்டலம்: 0462-2572783

More News

    Read more about: travel tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+