Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் பயணிகளுக்கு நற்செய்தி – அதிரடியாக ஏசி பெட்டிகளின் கட்டணத்தை குறைத்த இந்தியன் ரயில்வே!

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி – அதிரடியாக ஏசி பெட்டிகளின் கட்டணத்தை குறைத்த இந்தியன் ரயில்வே!

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள். அப்படியானால் இது உங்களுக்கு செம்ம குட் நியூஸ் தான்! இந்திய ரயில்வே மேம்பட்ட மற்றும் இடையூரற்ற பயணத்தை பயணிகளுக்கு வழங்கும் விதமாக பல வசதிகளை செய்து வருகிறது. இப்போது அதில் ஒரு படியாக (AC 3 tier) ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு டிக்கெட்டின் விலையை கடந்த புதன்கிழமை முதல் குறைத்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி நீங்கள் மலிவான டிக்கெட் கட்டணத்தில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம் பயணிகளே!

 AC 3 tier coaches

2021 இல் கொண்டுவந்த மாற்றம்

2021 செப்டம்பரில் 3Eயை ஒரு வகுப்பாக அறிமுகப்படுத்திய ரயில்வே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெட்டிகளில் சாதாரண ஏசி 3 பெட்டிகளை விட 6-8 சதவீதம் குறைவாக இருக்கும் என்று அறிவித்தது. நவம்பர் 2022 ஆர்டருக்கு முன், பயணிகள் AC 3 எகானமி டிக்கெட்டுகளை "3E" என்ற தனி வகையின் கீழ் குறிப்பிட்ட ரயில்களில் முன்பதிவு செய்யும்படி இருந்தது

எகனாமி ஏசி3 கோச்க்கும் ஏசி3 கோச்க்கும் இடையே உள்ள வித்தியாசம்

எகனாமி ஏசி3 கோச் என்பது ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு சிறந்த மற்றும் மலிவான ஏசி பயணத்தை வழங்குவதற்காக இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவான குளிரூட்டப்பட்ட ரயில் பயண சேவையாகும். இந்த கோச்சின் டிக்கெட் கட்டணம் சாதாரண ஏசி3யை விட 6-7 சதவீதம் குறைவு என இந்திய ரயில்வே இப்போது அறிவித்துள்ளது.

 AC 3 tier coaches

கட்டணம் ஏன் குறைக்கப்பட்டது?

இதுகுறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ஏசி 3 எகானமி கோச்களை விட, ஏசி 3 பெட்டிகளில் பயணிகளுக்கு சிறந்த வசதி உள்ளது. மேலும், ஒரு சாதாரண ஏசி 3-அடுக்கு பெட்டியில் 72 பெர்த்கள் உள்ளன, அதே சமயம் ஏசி 3-அடுக்கு எகனாமி கோச் அதிக விசாலமாக உள்ளதால் 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட பெர்த்களை கொண்டுள்ளது. ஏசி 3-அடுக்கு எகனாமியில் உள்ள பெர்த்களை ஏசி 3-அடுக்குடன் ஒப்பிடும்போது படுக்கைகள் மெல்லியதாக உள்ளன. அப்படி இருக்க ஏன் விலை மட்டும் இரண்டிற்கும் ஏறக்குறைய ஒரே அளவு இருக்கின்றது என்ற காரணத்தில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ac3tiercoaches

ஏசி 3-அடுக்கு எகனாமி வகுப்பில் உள்ள அம்சங்கள்

1. போர்வையுடன் கூடிய வசதியான பெர்த்கள்

2. நீளமான மற்றும் குறுக்கு வடிவில் மடிக்கக்கூடிய சிற்றுண்டி சைடு பிளேட்கள்

3. ஒவ்வொரு பெர்த்துக்கும் தனித்தனி ஏசி வென்ட்கள்

4. ஒவ்வொரு கோச்சிலும் திவ்யாஞ்சனுக்கான பரந்த கழிப்பறை கதவு மற்றும் நுழைவு கதவு

5. ஒவ்வொரு பெர்த்துக்கும் தனிப்பட்ட வாசிப்பு விளக்கு மற்றும் USB சார்ஜிங் புள்ளிகள்

6. ஹெட்ரூம் கொண்ட நடுத்தர மற்றும் மேல் பெர்த்கள்

7. பொது முகவரி மற்றும் பயணிகள் தகவல் அமைப்புகள்

8. சிசிடிவி கேமரா

9. மேல் மற்றும் நடுத்தர பெர்த்களை அணுகுவதற்கு ஏணியின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு

திருப்பி செலுத்தப்படும் டிக்கெட் தொகை

நீங்கள் ஏற்கனவே டிக்கெட் புக் செய்து விட்டீர்கள் என்றாலும் கவலை வேண்டாம். ஆன்லைனிலும், கவுன்டரிலும் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ஆர்டரின்படி, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான கூடுதல் தொகை திரும்ப வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ac3tiercoaches

ஏசி 3 பெட்டிகளை விட ஏசி 3 எகானமி பெட்டிகள் குறைவு

தற்போது, 11,277 சாதாரண ஏசி 3 பெட்டிகளுடன் ஒப்பிடுகையில், 463 ஏசி 3 எகானமி பெட்டிகள் உள்ளன என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் ஏசி 3-அடுக்கு எகானமி வகுப்பின் மூலம் ரயில்வே ரூ.231 கோடியை ஈட்டியுள்ளது. இதுவரை வந்த தகவல்கள் படி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட், வரை, 15 லட்சம் பேர் இந்தப் பெட்டிகளில் பயணம் செய்து, 177 கோடி ரூபாயை இந்திய ரயில்வேக்கு அளித்துள்ளனர்.

.எல்லாம் கருத்தில் கொண்டு ஏசி 3 எகனாமி வகுப்பின் கட்டணம் ஏசி 3 வகுப்பின் கட்டணத்தை விட கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பட்டாலும் ஏசி 3 எகனாமி வகுப்பில் கிடைக்கும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+