• Follow NativePlanet
Share
» » IRCTC இல் வாய்ஸ் டிக்கெட்டிங் சிஸ்டம் – டிக்கெட் புக் செய்வது ஈஸியாகப் போகிறது!

IRCTC இல் வாய்ஸ் டிக்கெட்டிங் சிஸ்டம் – டிக்கெட் புக் செய்வது ஈஸியாகப் போகிறது!

அதிவேகமாக செல்லும் வந்தே பாரத், உலகத்தர சொகுசு ஹோட்டல்களை விஞ்சும் அளவிற்கு சொகுசு ரயில்களான மஹாராஜாஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், அழகிய விஸ்டாடோம் ரயில்கள் என இந்திய ரயில்வே கலக்கி வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் வாய்ஸ் அடிப்படையிலான டிக்கெட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. குரல் (Voice) அடிப்படையிலான இ-டிக்கெட் அம்சம் முன்பதிவு செயல்முறையை எளிதாகவும் விரைவாகவும் செய்யும். Ask Disha என்ற இந்த அம்சத்தின் அசத்தலான அம்சங்கள் இதோ!

IRCTC, Indian railways

மேம்பட்ட வசதிகளை அறிமுகம் செய்யும் IRCTC

IRCTC ஆனது நாளொன்றுக்கு ஆன்லைன் டிக்கெட் திறனை அதிகரிக்க பின்தள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை எதிர்நோக்குகிறது. எந்தவொரு பட்டனை கிளிக் செய்யாமல் குரல் அடிப்படையிலான கட்டளைகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது மிகவும் ஈஸி தானே! IRCTC குரல் அடிப்படையிலான இ-டிக்கெட் வசதியை அறிமுகம் செய்து, பயணிகளுக்கு டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய உதவும்.

irctcindianrailways

IRCTCயின் 'ஆஸ்க் திஷா'

பெங்களூரைச் சேர்ந்த CoRover பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட Ask DISHA. Ltd, அக்டோபர் 2018 இல் IRCTC ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. 'ஆஸ்க் திஷா' (Ask DISHA) பல அம்சங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது. வாடிக்கையாளர்கள் குரல் அடிப்படையிலான கட்டளையைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் மற்றும் அவற்றின் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைச் சரிபார்க்கலாம்.

irctcindianrailways

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும் 'ஆஸ்க் திஷா'

Artificial Intelligence அடிப்படையிலான இயங்குதளமானது பயனர்கள் PNR நிலையைச் சரிபார்க்கவும், மேலும் ரயில் பயணம் தொடர்பான எந்தக் கேள்விகளுக்கும் பதில்களைப் பெறவும் அனுமதிக்கிறது. 'ஆஸ்க் திஷா' பயணிகளுக்கு டிக்கெட்டுகளை முன்னோட்டமிடவும், அச்சிடவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. எனவே, பெயரைப் போலவே, நீங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் அதற்கான பதில்களைப் பெறலாம்.

IRCTC, Indian railways

பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் தேவையில்லை

Ask Disha வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவுகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் OTP சரிபார்ப்பு லாக்-இன் மூலம் பிற சேவைகளுக்கான ஆதரவைப் பெறலாம். IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பயனர்கள் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் குரலை மட்டுமே பயன்படுத்தினால் போதும்.

IRCTC, Indian railways

'ஆஸ்க் திஷா' வின் அசத்தலான அம்சங்கள்

o IRCTC இன் சாட்போட் 'ஆஸ்க் திஷா' 2.0 உதவியுடன் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்காக, வாடிக்கையாளர்கள் உரை அல்லது குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.

o Ask Disha 2.0 இல் வாடிக்கையாளர் தனது டிக்கெட்டை ரத்து செய்யலாம் மற்றும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைப் பார்க்கலாம்.

o உங்கள் PNR நிலையை பிளாட்ஃபார்மில் இருந்தும் பார்க்கலாம்.

o 'ஆஸ்க் திஷா' 2.0 இல் பயணிகள் தங்கள் ரயில் பயணத்திற்கான போர்டிங் மற்றும் சேருமிட நிலையத்தையும் மாற்றலாம்.

o AI-இயங்கும் IRCTCயின் 'ஆஸ்க் திஷா' இல் பயணிகள் தங்கள் பயணத்திற்கான ரயில் டிக்கெட்டுகளை முன்னோட்டமிடலாம், அச்சிடலாம் மற்றும் பகிரலாம்.

o உங்கள் ரயில் பயணம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களையும் பெறலாம்.

IRCTC அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆஸ்க் திஷா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளத்தில் AI-இயங்கும் குரல் அடிப்படையிலான டிக்கெட் முன்பதிவு அம்சத்தை அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கை கூறுகிறது. உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க IRCTC வடிவமைத்த சிறப்புத் திட்டமான 'ஆஸ்க் திஷா' IRCTCஇன் அதிகாரப்பூர்வ இணையதளமான-irctc.co.in இல் உபயோகிக்கலாம்.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+