Search
  • Follow NativePlanet
Share
» » சென்னையிலிருந்து ஷீரடிக்கு IRCTCயின் சூப்பர் டூர் பேக்கேஜ் – வெறும் ரூ.3,400 இல்!

சென்னையிலிருந்து ஷீரடிக்கு IRCTCயின் சூப்பர் டூர் பேக்கேஜ் – வெறும் ரூ.3,400 இல்!

இந்தியாவிலேயே மிகவும் போற்றப்படும் தலங்களில் ஒன்றான ஷீரடிக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஸ்ரீ சாய்பாபா பக்தர்கள் வருகை தருகின்றனர். எந்த மதத்தினரும், எந்த சாதியினரும் இங்கு வரவேற்கப்படுகிறார்கள். இந்த இடத்திற்கு வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வந்து விட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதற்கு IRCTC யின் அசத்தலான சென்னை to ஷீரடி டூர் பேக்கேஜை பயனபடுத்திக் கொள்ளலாம். 3 இரவுகள் 4 பகல்கள் கொண்ட இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் ரூ.3,400 இல் ஆரம்பிக்கிறது! சுற்றிப்பார்க்கும் இடங்கள், கட்டணம் மற்றும் பிற விவரங்கள் கீழே!

Chennai to Shirdi IRCTC package, Chennai, Shirdi

உலகப்புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில்

ஒரு காலத்தில் ஒரு சிறிய கிராமமாக, மண் சுவர்கள் கொண்ட ஓலை வீடுகளை உள்ளடக்கிய ஷீரடி இன்று நவீன கட்டிடங்கள் மற்றும் கடைகளுடன் ஒரு பெரிய நகரமாக மாறியுள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த இடத்திற்கு செல்லும் யாதீர்கர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே தவிர குறையவில்லை. இந்திய ரயில்வே டூரிசம் மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) சாதாரண மக்களுக்கு பலனளிக்கும் வகையில் பல டூர் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று தான் இந்த சென்னை to ஷீரடி டூர் பேக்கேஜ்.

டூர் பேக்கேஜ் பற்றிய விவரங்கள்

பேக்கேஜின் பெயர்: சென்னை - ஷீரடி பேக்கேஜ்

சேருமிடம்: ஷீரடி

பயண முறை: ரயில்

ரயிலின் பெயர்/எண்: ஷீரடி எக்ஸ்பிரஸ்/22601

நிலையம்/ புறப்படும் நேரம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 10:10 மணி.

எப்போது புறப்படுகிறது: ஒவ்வொரு புதன்கிழமையும்

ஹோட்டல்: ஹோட்டல் சாய்ஸ்ரி

Chennai to Shirdi IRCTC package, Chennai, Shirdi

டூர் பேக்கேஜ்கிற்கான கட்டணங்கள்

கம்ஃபோர்ட் கிளாஸ்:

ஒற்றை ஆக்கிரமிப்பு: ரூ. 4790

இரட்டை ஆக்கிரமிப்பு: ரூ. 3640

டிரிபிள் ஆக்கிரமிப்பு: ரூ. 3570

குழந்தை (5-11 வயது) படுக்கை வசதியுடன்: ரூ. 2840

குழந்தை (5-11 வயது) படுக்கை வசதி இல்லாமல்: ரூ.1960

ஸ்டான்டர்ட் கிளாஸ்

ஒற்றை ஆக்கிரமிப்பு: ரூ. 7510

இரட்டை ஆக்கிரமிப்பு: ரூ. 6360

டிரிபிள் ஆக்கிரமிப்பு: ரூ. 6290

குழந்தை (5-11 வயது) படுக்கையுடன்: ரூ. 5560

குழந்தை (5-11 வயது) படுக்கை வசதி இல்லாமல்: ரூ. 4680

Chennai to Shirdi IRCTC package, Chennai, Shirdi

சென்னை - ஷீரடி பேக்கேஜுக்கான பயணத் திட்டம்

நாள் 1: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 22601) 10:10 மணிக்கு புறப்படும்.

நாள் 2: 11:30 மணிக்கு சாய்நகர் ஷீரடி நிலையத்தை அடைந்து, ஏ.சி அல்லாத வாகனம் மூலம் ஹோட்டலுக்கு செல்லுவீர்கள். செக்-இன் செய்த பிறகு அவரவர் வசதிக்கேற்ப கோயிலுக்குச் செல்லுங்கள். ஹோட்டலில் இரவு தங்க வைக்கப்படுவீர்கள்.

நாள் 3: ஹோட்டலில் இருந்து 07:00 மணிக்கு செக்-அவுட் செய்து, சாய்நகர் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சாய்நகர் சென்னை எக்ஸ்பிரஸில் (ரயில் எண். 22602) 08:25 மணிக்கு ஏறலாம்.

நாள் 4: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 09:40 மணிக்கு வந்தடையும்.

டூர் பேக்கேஜில் ஹோட்டல்கள், டிப்ஸ், இன்சூரன்ஸ், டெலிபோன் கட்டணங்கள், சலவை மற்றும் தனிப்பட்ட இயல்புடைய அனைத்து பொருட்களிலும் போர்டேஜ் இல்லை. ஸ்டில்/வீடியோ கேமராக் கட்டணம், நினைவுச் சின்னங்களுக்கான நுழைவுக் கட்டணம் மற்றும் பயணத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படும் எந்தச் செயல்பாடுகளுக்கும் நேரடியாகக் கட்டணம் விதிக்கப்படும். பயணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர மற்ற உணவுகள்/வழி உணவுகள், சுற்றிப் பார்ப்பது மற்றும் செயல்பாடுகளுக்கு நீங்களே கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ IRCTC இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+